இந்த ஆண்டு ஆரம்பத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமாக ஜனநாயகன் திரைப்படம் காணப்பட்டது. இந்த படம் விஜய் நடிப்பில் வெளியாக இருந்த இறுதிப் படமாக காணப்பட்டது. எனினும் இந்த படத்தின் சென்சார் பிரச்சனையால் படத்தில் ரிலீஸ் தள்ளிப் போய்க் கொண்டிருந்தது.
இந்த நிலையில், விஜய் தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்ற விழாவின் போது, படத்தின் தயாரிப்பாளர் வெங்கட் கே. நாராயணா ஒரு முக்கிய தகவலை தெரிவித்துள்ளார். அதன்படி அடுத்த இரண்டு வாரங்களுக்குள் ஜனநாயகன் திரையரங்குகளில் வெளியாகலாம் என அவர் கூறியுள்ளார்.
மேலும், தற்போது திரைப்படம் சென்சார் சான்றிதழ் பெறும் இறுதி கட்ட பணிகளில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். “புதிய தலைமுறை, புதிய காலம்” என்ற சூழ்நிலையுடன் பட வெளியீடு இணைந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய சூழலில் விஜய் முதலமைச்சராக பதவியேற்ற பிறகு வெளியாகும் முதல் பெரிய திரைப்படம் என்பதால் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
எனினும் படக்குழு சார்பில் எந்தவித தகவலும் அறிவிக்கவில்லை. தற்போது அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி அறிவிப்புக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
Listen News!