• Jun 24 2025

சற்றுமுன் வெளியாகிய கவினின் "கிஸ் " பட முதல் சிங்கிள்..! வீடியோ இதோ..

Mathumitha / 1 week ago

Advertisement

Listen News!

இளைய தலைமுறை நடிகராக தமிழ் திரையுலகில் செல்வாக்கை ஏற்படுத்தி வருகிறார் கவின். அவர் நடிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படம் ‘கிஸ்’. இப் படத்தில் பிரீத்தி அஸ்ராணி கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்த நிலையில் தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.


இந்நிலையில் இப்படத்தின் முதல் சிங்கிள் வீடியோ பாடல் ‘ஜில்லேலம்மா ஜில்லேலம்மா Fire-u வச்சாலே’ இன்று வெளியானது. விஷ்ணு எடாவன் எழுதிய இந்த பாடலை ஆதித்யா மற்றும் ப்ரியா மாலு பாடியுள்ளனர். இசையமைத்துள்ளவர் ஜென் மார்ட்டின் கம்போஸ். ரசிகர்களை உற்சாகத்தை ஏற்படுத்தும் இந்த பாடல் வெளியான சில மணிநேரங்களிலேயே இணையத்தில் வைரலாகி வருகிறது.


கவின் - பிரீத்தி ஜோடியின் ரசிக்கத்தக்க கெமிஸ்ட்ரி கலர்ஃபுல் ஃபிரேம்கள் மற்றும் ஆட்டத்துடன் அமைந்த இந்த பாடல் இளைய ரசிகர்களிடம் ஹிட் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Advertisement

Advertisement