• Aug 19 2025

விமர்சனங்கள் காசுக்காகவா? "ரெட்ரோ" தோல்விக்கு இதுவே காரணமா?

Mathumitha / 2 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் நடைபெற்ற நீயா நானா நிகழ்ச்சியில் தமிழ் சினிமா விமர்சன கலாச்சாரத்தையே சுட்டிக்காட்டும் பெரும் விவாதம் வெடித்தது. குறிப்பாக ‘ரெட்ரோ’ மற்றும் ‘Thug Life’ போன்ற பிரம்மாண்ட படங்கள் எதிர்பார்த்த அளவிலான வரவேற்பை பெறாததற்கான காரணம் குறித்து நடந்த விவாதம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


விமர்சனங்கள் பெரும்பாலும் காசுக்காகவே செய்யப்படுகின்றன என சிலர் குற்றஞ்சாட்ட மக்கள் தற்பொழுது விமர்சனங்களை நம்பி தியேட்டருக்கு செல்லாமல் நேரடியாக OTT-யில் வெளியீட்டை காத்திருக்கின்றனர் என்பதே உண்மை எனவும் கூறப்பட்டது. இதனால்தான் பல பெரிய படங்கள் கூட பாக்ஸ் ஆபிஸ் லாபத்தை காண முடியாமல் சராசரி வரவேற்பில் முடிகின்றன. இதற்கு எடுத்துக்காட்டாக சூர்யா நடிப்பில் உருவான 'ரெட்ரோ' படம் மட்டும் 235 கோடி வசூல் செய்தாலும் அதில் லாபம் எதுவும் இல்லை என கூறப்படுகிறது.


விமர்சனங்களில் ப்ளூ சட்டை மட்டும் நேர்மையாக பேசுகிறார் என்றும் மற்றவர்கள் பெரும்பாலும் படம் வெளியேறும் முன்பே ஓரங்கட்ட பேசுகிறார்கள் என்றும் தனஞ்சயன் கருத்து தெரிவித்தார். இவை அனைத்து விவாதங்களும் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் விமர்சனங்களின் நம்பகத்தன்மை மற்றும் தியேட்டர் வசூல் மீதான தாக்கம் குறித்த சிந்தனையை எழுப்பியுள்ளது.

Advertisement

Advertisement