• Jan 26 2026

மிக்ஜாம் புயல் பாதிப்பின் கொடூரம்- முதல் ஆளாக பெரிய தொகை நிதி உதவியை செய்த சூர்யா மற்றும் கார்த்தி

stella / 2 years ago

Advertisement

Listen News!

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் வரலாறு காணாத மழை பொழிந்து வருகிறது. அதனால் தண்ணீர் அனைத்து இடங்களிலும் பல ஆதி உயரத்திற்கு தேங்கி இருக்கிறது.பல இடங்களில் வீடுகளுக்கு உள்ளும் வெள்ள நீர் புகுந்துவிட்டதால், மக்கள் பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.

மேலும் மழை காரணமாக பல இடங்களில் மழை நீர் தேங்கி நிற்பதால், போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகள் நடைபெறுவதாக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்த போதிலும் நேற்று இரவில் இருந்து கொட்டி தீர்க்கும் மழையால், சென்னை நகரமே வெள்ளக்காடாக மாறியுள்ளது. 


இதனால் பலர் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சாப்பாடு இல்லாமல் கஷ்டப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பலருக்கு பொதுமக்கள் சிலர் தானாக முன்வந்து உதவி செய்கின்றார்கள்.இந்நிலையில், நடிகர்களான சூர்யா மற்றும் கார்த்தி மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், ரூபாய் 10 லட்சம் நிதியுதவி அளித்துள்ளனர். 


தொடர்ந்து தங்களது ரசிகர் மன்றங்கள் மூலமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட, அத்தியாவசியப் பொருட்களை வழங்க இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement