• Jan 18 2025

இந்த விஷயத்தை நான் அவரிடம் தான் கற்றுக் கொண்டேன்- ஷாருக்கான் குறித்து அஜித் சொன்ன தகவல்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் தான் நடிகர் அஜித். இவரது நடிப்பில் இறுதியாக வெளியாகிய துணிவு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.அத்தோடு வசூலிலும் அள்ளிக் குவித்தது. இதனை அடுத்து இயக்குநர் மகிழ்திருமேனி இயக்கத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.

அதன்படி மகிழ் திருமேனி இயக்கும் அஜித்தின் 62ஆவது படத்துக்கு விடாமுயற்சி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் முதல் ஷுட்டிங் அஜர்பைஜானில் நடந்தது.இந்தப் படத்துக்கு பிறகு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கலாம் என்றும் வெற்றி மாறன் இயக்கத்தில் நடிக்கலாம் என்றும் தகவல்கள் உலாவுகின்றன. 


இதற்கிடையே அஜித் ஒரே ஒரு ஹிந்தி படத்தில் நடித்திருக்கிறார். சந்தோஷ் சிவன் இயக்கிய அசோகா படத்தில் ஷாருக்கானுடன் சிறிய வேடத்தில் நடித்திருந்தார். அசோகா படத்தில் நடித்தது குறித்து அஜித் பேசியிருக்கும் பழைய வீடியோ ஒன்று இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. அவர் அளித்திருந்த அந்தப் பேட்டியில், "நடிகர் ஷாருக்கானை எனக்கு ரொம்பவே பிடிக்கும். 


அவருடன் நடிப்பது நல்ல அனுபவத்தை தரும் என்று நம்பினேன். அதேநேரம் அசோகாவில் அனுபவத்தை தாண்டி ஷாருக்கானிடம் நிறைய கற்றுக்கொண்டேன். அவர் எவ்வளவு பெரிய ஸ்டார். ஆனால் ஷூட்டிங் ஸ்பாட்டில் அவரது காட்சி முடிந்துவிட்டாலும் மற்ற வேலைகளை சுறுசுறுப்பாக செய்துகொண்டிருப்பார். அது எனக்கு ஆச்சரியத்தை தந்தது. அவர் சுறுசுறுப்பாக இருந்ததால் மொத்த யூனிட்டுமே அப்படி இயங்கியது. இந்த விஷயத்தை அவரிடமிருந்து நான் கற்றுக்கொண்டேன்" என்றார்.


Advertisement

Advertisement