• Nov 22 2024

என்னோட கண் கண்ட தெய்வம் மனைவி தான், எல்லா நேரத்திலும் என் கூடவே இருந்திருக்கிறா- பிரேமலதா பற்றி நெகிழ்ந்து பேசிய கேப்டன்

stella / 10 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் நேற்று காலை உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். நுரையீரல் அழற்சி காரணமாக அவர் இறந்ததாக அறிவிக்கப்பட்டது.

 மியாட் மருத்துவமனையில் உயிர்விட்ட விஜயகாந்தின் உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்கும், பின்னர் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்திற்கும் கொண்டு செல்லப்பட்டது. 


அங்கு திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் என திரளானோர் அஞ்சலி செலுத்தி வந்தனர்.இதை தொடர்ந்து இன்று காலை அவரின் காமராஜர் சாலையில் உள்ள தீவுத்திடல் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கும் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். 

பின்னர் விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் தொடங்கிய நிலையில் சாலையில் இரு மருங்கிலும் கண்ணீருடன் லட்சக்கணக்கானோர் விஜயகாந்திற்கு பிரியாவிடை அளித்து வருகின்றனர்.இந்த நிலையில் விஜயகாந்த அளித்த பழைய பேட்டி ஒன்று வைரலாகி வருகின்றது.


அதில் விஜயகாந்த் தனது மனைவி குறித்து பெருடையாக பேசியுள்ளார். அதாவது எல்லோரும் கணவனே கண் கண்ட தெய்வம் என்று சொல்லுவாங்க ஆனால் என்னைப் பொறுத்த வரைக்கும் தனைவி தான் எனக்கு கண் கண்ட தெய்வம் என்னோட நஷ்டம் கஷ்டம் எல்லாவற்றிலும் என் கூடவே இருந்திருக்கிறார் இப்போதும் இருக்கிறார் என்றும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement