• Jan 19 2025

எமர்ஜென்சி படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியானது!

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக திகழ்பவர் தான்  கங்கனா ரனாவத். இவர் தனது நடிப்பினால் இதுவரையில் நான்கு தேசிய விருதுகளை வென்றுள்ளார்.

தற்போது முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நாடளாவிய ரீதியில் அமல்படுத்திய அவசர நிலை பிரகடனத்தை மையமாக வைத்து எமர்ஜென்சி படத்தை உருவாக்கியுள்ளார். குறித்த படத்தில் இந்திரா காந்தியாக கங்கனா நடித்துள்ளார். படத்தை அவரே இயக்கி நடித்துள்ளார்.

இந்த படத்தில் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள நிலையில், படத்தின் திரைக்கதை மற்றும் வசனத்தை ரித்தேஷ் ஷா எழுதியுள்ளார். 

இந்த படத்தின் படப்பிடிப்புகள் கடந்த ஆண்டு நிறைவடைந்த நிலையில், சில காரணங்களினால் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது. தற்போது இந்த படம் அடுத்த மாதம் ஆறாம் தேதி வெளியாகும் என அதிகார பூர்வமாகவே அறிவிக்கப்பட்டது.


இந்த நிலையில் எமர்ஜென்சி படத்தின் டெய்லர் சமீபத்தில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் பெற்றது. தற்போது இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான 'சிங்கசன் களி கரோ' என்ற பாடல் வெளியாகியுள்ளது.

இது குறித்த அறிவிப்பை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த பாடலை உதித் நாராயண், நகாஷ் அஜிஸ் மற்றும் நகுல் அப்யங்கர் ஆகியோர் பாடியுள்ளார்கள்.


Advertisement

Advertisement