• May 20 2026

சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர் ஹீரோவாக அறிமுகமாகும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜ் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் கவனம் பெற்ற ஸ்ரீ தேவா, தற்போது சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார்.

சின்னத்திரையில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து,  கதாநாயகனாக களம் இறங்கும் ஸ்ரீ தேவாவுக்கு ‘வசூல் மன்னன்’ திரைப்படம் முக்கியமான படியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

மேலும் இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. வில்லத்தனத்துடன் நகைச்சுவை கலந்த கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தை ‘கன்னக்கோல்’ படத்தை இயக்கிய வேல் குமரேசன் இயக்கியுள்ளார். எம்.எல். புரொடக்சன்ஸ் சார்பில் ஆறுமுகம் மாதப்பன் தயாரித்துள்ளார்.


வாழ்க்கையில் எதை இழந்தாலும் தன்னம்பிக்கையை இழக்கக்கூடாது என்பதே படத்தின் மையக் கருத்தாக அமைந்துள்ளது. நிவேதா நாயகியாக நடித்துள்ள இந்தப் படத்தில் வேல ராமமூர்த்தி, இமான் அண்ணாச்சி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த நிலையில், நடிகர் ஸ்ரீ தேவா நடிப்பில் வெளியாகவுள்ள ‘வசூல் மன்னன்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. தற்போது ஸ்ரீ தேவாவுக்கு பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement