• May 20 2026

கரூர் முதல் ஜனநாயகன் வரை.. பழிக்கு மேல் பழி..! ரொம்ப எமோஷனலாக பேசிய விஜய்

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழகத்தில் நடைபெற்று வரும் தேர்தல் பரப்புரையின் ஒரு பகுதியாக தஞ்சாவூரில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சந்தித்தார் நடிகரும் அரசியல் கட்சி தலைவருமான விஜய்.

இந்த கூட்டத்தில் அவர் பேசுகையில், சமீப காலமாக தன்னைச் சுற்றி உருவாகி வரும் சர்ச்சைகள் குறித்து மறைமுகமாக கருத்து தெரிவித்துள்ளார்.

அதன்படி அவர் கூறுகையில், கரூர் சம்பவம் முதல் ‘ஜனநாயகன்’ திரைப்பட பிரச்சனை வரை தொடர்ந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. பழிக்கு மேல் பழி சுமத்தப்படுகின்றது.


சினிமா மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான கேள்விகளுக்கு நேரடி பதில் அளிக்காத அவர், தன்னை குறிவைத்து திட்டமிட்டு விமர்சனங்கள் எழுப்பப்படுகின்றன என்றும், மக்களுக்காகவே தனது பயணம் தொடரும் என்றும் குறிப்பிட்டார்.

விஜயின் இந்த பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

Advertisement

Advertisement