• Apr 15 2026

சங்கீதாவின் உண்மை முகம் இது தானா.? விஜயின் உதவியாளர் சொன்ன பகீர் தகவல்

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் உச்ச நடிகரான விஜயை ரசிகையாக இருந்த சங்கீதா, காதலித்து இரு குடும்பங்களின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். சுமார் 27 ஆண்டுகளாக அமைதியாக இருந்த இந்த தம்பதியினர் தற்போது விவாகரத்து செய்ய உள்ளதாக குற்றச்சாட்டு தகவல்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, விஜய் மீது சில குற்றச்சாட்டுகளை முன்வைத்த சங்கீதா சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்ததாக தகவல்கள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது. எனினும், இது தொடர்பில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகாத நிலையில் பலரும் தங்களுடைய கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.

இந்த நிலையில், நடிகர் விஜய்க்கு முன்னாள் உதவியாளராக இருந்த ஒருவர் தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், விஜயின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றியும் அவருடைய மனைவி சங்கீதா பற்றியும் பல தகவல்களை பகிர்ந்துள்ளார்.


அதன்படி அவர் கூறுகையில், விஜய் சினிமாவுக்கு வந்த ஆரம்பத்தில் அவருக்கு ராஜன் என்ற உதவியாளர் இருந்தார். அவர் மூலம் தான் சங்கீதா அறிமுகமானார். ராஜன் தான் ஆரம்பத்தில், சங்கீதா நல்லவர், நீங்கள் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறியதாக தெரிவித்தார். 

ஆனால் சங்கீதா திருமணம் செய்து கொண்டு வீட்டிற்கு வந்ததும் , முதலில் அந்த வீட்டில் இருந்து ராஜனையே தூக்கிவிட்டார் என்றும் கூறியுள்ளார்.

எனவே, சங்கீதாவின் குணநலன் பற்றியும் யோசிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது அவர் அளித்த பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது. 

மேலும், இந்த விவாகரத்து வழக்கு தொடர்பில் இதுவரை விஜய் தரப்பிலோ சங்கீதா தரப்பிலோ எந்தவொரு அதிகாரப்பூர்வ விளக்கமும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement