தமிழ் சினிமாவில் புதிய ஹீரோக்கள் வந்தால், அவர்களின் முதல் படத்தின் வெற்றி ரசிகர்களுக்கு சுவாரஸ்யமான நிகழ்வாகும். அதுபோல, டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை இயக்கி வெற்றி பெற்ற இயக்குனர் அபிஷன் ஜீவிந்த், ஹீரோவாக அறிமுகமாகியுள்ள “With Love” திரைப்படம் பிப்ரவரி 6ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி, 11 கோடிக்கும் மேல் வசூல் செய்து வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
அபிஷன் ஜீவிந்த், இயக்குநராக தமிழ் சினிமாவில் முன்னணி இடத்தை பிடித்தவர். இவர் இயக்கிய “டூரிஸ்ட் ஃபேமிலி” படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த வெற்றியின் பின்னர், அவர் ஹீரோவாக அறிமுகமாகும் முயற்சியில் “With Love” படத்தை எடுத்துக்கொண்டார்.

இந்த திரைப்படம் பிப்ரவரி 6ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியதும், குறுகிய காலத்தில் 11 கோடிக்கும் மேலான வசூல் சாதனை புரிந்துள்ளது. இதன் மூலம் அபிஷன் ஜீவிந்த் ஒரு திறமையான ஹீரோவாகவும், திரையுலகில் புதிய செல்வாக்கு பெற்றார்.
இந்த வெற்றி குறித்து அபிஷன் ஜீவிந்தின் நண்பர் கூறிய கமெண்ட் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. அதாவது, “GPAY-ல 500 இருக்குமாடான்னு கேட்டவன் படம் இன்னைக்கு 3 நாளில 11 கோடிக்கு வசூலித்துள்ளது.” என்று கூறியுள்ளார்.
இதனைப் பார்த்த, அபிஷன் ஜீவிந்த் சிரிக்கிற எமோஜி மூலம் ரிப்ளை செய்துள்ளார். இது தற்போது இணையத்தில் பரவி ரசிகர்களிடையே மிகுந்த பேசு பொருளாக மாறியுள்ளது.
From “GPay la 500 irukkuma da?”
to 11 CR in 3 days. @Abishanjeevinth ♥️♥️♥️♥️♥️ #Withlove https://t.co/DG5WGh5bN5
Listen News!