தமிழ் சினிமாவின் மிகுந்த பாராட்டுப் பெற்ற நடிகர் சசிகுமார், சமீபத்திய நேர்காணலில் தன் கருத்துகளை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார். குறிப்பாக, கல்லூரிகளில் திரைப்படங்களை புரமோட் செய்யும் பழக்கம் பற்றி அவர் தெரிவித்த கருத்துகள் தற்போது சமூக வலைத்தளங்களில் பெரும் கவனம் பெற்றுள்ளன.

நேர்காணலில் சசிகுமார், “மாணவர்கள் பிரபலங்களின் வருகையை ரசிப்பார்கள். அதை ஒரு தருணமாக எடுத்துக்கொண்டு அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துவிடுவார்கள். கல்லூரிகளில் கல்வி சார்ந்த விஷயங்களையே முன்னிலைப்படுத்த வேண்டும்.
சினிமாவை அல்ல. இந்த காரணத்தால் என் படங்களை நான் கல்லூரிகளில் ஒருபோதும் புரமோட் செய்ய மாட்டேன். தயாரிப்பாளர் மிகுந்த அழுத்தம் கொடுத்தால், கட்டாயமான சூழ்நிலையில் மட்டுமே யோசிப்பேன்.” என்று கூறியுள்ளார்.
இந்த பதிப்பு தற்போது திரையுலக ரசிகர்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது. சசிகுமார் தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களில் நடித்து பிரபலமான நடிகராக தன்னை நிலைநாட்டியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!