• May 08 2025

‘DD NEXT LEVEL' படத்திற்கு கிடைத்த U/A சான்றிதழ்..! சந்தோசத்தில் படக்குழு...!

subiththira / 4 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் நகைச்சுவை நடிகர் சந்தானம். ஆரம்பத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சியிலிருந்து தற்பொழுது வெள்ளித்திரை வரையான பயணத்தை தனது நகைச்சுவையின் மூலம் கட்டியெழுப்பியுள்ளார் சந்தானம். தற்போது அவரது நடிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படம் ‘DD NEXT LEVEL’. இப்படத்தினை சமீபத்தில் தணிக்கை குழு பரிசீலனை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்தவகையில் இப்படத்திற்கு U/A தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த அப்டேட் தற்போது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக ஊடகங்களில் இந்த செய்தி விரைவாகப் பரவி வருவதுடன், “சந்தானத்தின் என்ட்ரி வேறலெவல்...!” என ரசிகர்கள் உற்சாகத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர். 


‘DD NEXT LEVEL’ என்ற தலைப்பே ஒரு விசித்திரமான கவர்ச்சி கொண்டது.  அந்தவகையில் U/A சான்றிதழ் கொடுத்துள்ளது என்பது படத்திற்கான எதிர்பார்ப்பை மக்களிடம் அதிகரிக்க வைத்துள்ளது. அத்துடன் இப்படம் குடும்பத்துடன் பார்க்கக்கூடியதாகவும் சிறுவர்களுக்கு ஏற்ற வகையிலும் அமைந்துள்ளது.

இது போன்ற ஒரு வெற்றி படம் இப்பொழுது சந்தானத்திற்கு முக்கியமாக காணப்படுகின்றது. ஏனெனில் சமீபத்தில் வெளியான சந்தானத்தின் படங்களுக்கு எதிர்பார்த்த அளவு வரவேற்பு கிடைக்காததால் ‘DD NEXT LEVEL’ படம் அவரை திரையுலகில் நிரூபிக்கின்ற வகையில் அமைந்து கொள்ளும் என சிலர் எதிர்பார்க்கின்றனர்.


Advertisement

Advertisement