• Mar 15 2025

பொது மேடையில் சாய் பல்லவியை நொண்டியாக்கிய DSP.. நடந்தது என்ன?

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

அஜித் குமார் நடிக்கும் விடாமுயற்சி படத்திற்கு போட்டியாக நாக சைதன்யா சாய்பல்லவி நடிப்பில் வெளியான தண்டேல் படம் அடுத்த வாரம் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தை தமிழ் ரசிகர்கள் மத்தியில் ப்ரொமோட் செய்யும் பணிகளில் படக்குழுவினர் களம் இறங்கி உள்ளனர்.

அந்த வகையில் சென்னை லீலா பேலஸில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நாக சைதன்யா, சாய் பல்லவியும் கலந்து கொண்டுள்ளதோடு இவர்களுடன் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் கார்த்திக், இயக்குநர் சுப்புராஜ், வெங்கட் பிரபு, இசையமைப்பாளர்  தேவி ஸ்ரீ பிரசாத் ஆகியோர் கலந்து இருந்தனர்.

இந்த நிலையில், தண்டேல் படத்தில் நடித்த சாய் பல்லவி பற்றி இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் மேடையில் கலக்கல் ஆக கொடுத்தப் பேட்டி தற்போது வைரலாகி வருகின்றது. 


அதில் அவர் கூறுகையில் ,  இந்தப் படத்தின் போஸ்டர் வெளியான போது அதில் நாக சைதன்யாவின் கெட்டப்பை பார்த்து ரொம்பவும் மிரண்டு போயிட்டேன். இது நம்ம நாக சைதன்யாவா என்று.. ஏனென்றால் அந்த அளவுக்கு நாக சைன்யா இந்த படத்திற்காக ரொம்பவே மாறி உள்ளார்.

மேலும் கடல் சார்ந்த படம் என்றாலே அது தமிழ்நாட்டுடன் தொடர்புடையதாகவே காணப்படுகின்றது. கண்டிப்பா இந்த படம் எல்லோருக்கும் ஸ்பெஷல் படமாக இருக்கும். இந்த படத்தில் இயக்குனர் இந்த படத்திற்காக ரொம்பவே கஷ்டப்பட்டு உள்ளார்


சாய்பல்லவி பற்றி சொல்லவே வேண்டாம் மணிரத்தினம் சரி அவருக்கு ரசிகர் என்று சொல்லிவிட்டார். இந்த படத்தில் இடம் பெற்ற பாடலில் சாய் பல்லவி நடனம், கொரியாகிராபி என்பன அட்டகாசமாக உள்ளது.

மேலும் ஒரு பாட்டிற்கு பாட்டு இசை பார்ப்பதற்கு பல்லவி மிகவும் அவசியம் ஆனால் நான் சாய் பல்லவியை குறிப்பிடவில்லை என மேடையில் கலாய்த்து உள்ளார் தேவி ஸ்ரீ பிரசாத். தற்போது இவருடைய பேட்டி பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது..

Advertisement

Advertisement