• Aug 11 2025

"அட்டகத்தி படத்தை நல்லா இல்லனு ரிஜெக்ட் பண்ணிட்டாங்க.." இயக்குநர் வருத்தம்..

Mathumitha / 1 month ago

Advertisement

Listen News!

பிரபல இயக்குநர் பா. ரஞ்சித் தனது முதல் படம் ‘அட்டகத்தி’ குறித்து சமீபத்திய பேட்டியில் பகிர்ந்த ஒரு தகவல் தற்போது திரையுலகில் பேசுபொருளாகியுள்ளது. அதாவது "அட்டகத்தி படத்தை முதலில் பார்த்தவர் படம் நல்லா இல்லனு சொல்லிட்டு போயிட்டாரு. அவர் ஒரு பெரிய ப்ரொடியூசர். இரண்டாவதாக பார்த்த ஒரு பெரிய தயாரிப்பு நிறுவனமும் தயாரிப்பாளரை தனியாக கூப்பிட்டு இந்த படத்தை எல்லாம் ரிலீஸ் பண்ணாதீங்க. செலவு பண்ண வரைக்கும் பணம் வீண் தான் என்று சொல்லிட்டு போயிட்டாரு. இந்த மாதிரி படங்கள் எல்லாம் யாரும் பார்க்க மாட்டாங்கன்னு சொல்லிட்டாங்க. கடைசியில தயாரிப்பாளரே அவங்க சொன்னதை நம்ப ஆரம்பிச்சுட்டாரு. அதுக்கப்புறம் வெங்கட் பிரபு சார், ஸ்டுடியோ கிரீன் எல்லாரையும் கூப்பிட்டு, அந்த படத்துக்கு ஒரு திரையிடல் ஏற்பாடு பண்ணேன். அதுக்கப்புறம் தான் அந்த படம் அடுத்த கட்டத்திற்கே போச்சு" என பா. ரஞ்சித் உற்சாகமின்றி கூறினார்.


இந்த நிலையில் வெங்கட் பிரபு மற்றும் ஸ்டுடியோ கிரீன் குழுவை தொடர்புகொண்டு தனியாக ஒரு திரையிடல் ஏற்பாடு செய்ததாகவும் கூறியுள்ளார்."அந்த திரையிடலுக்குப்பின் தான் படம் அடுத்த கட்டத்திற்கே போச்சு," என பா. ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement