• Feb 09 2026

முதல் பாடலுக்கே இப்படி பிரச்சனையா.? உண்மை வெளிவரணும்.. புலம்பும் இயக்குநர் மோகன்ஜி.!

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சமீபத்தில் பெரும் கவனம் பெற்ற ‘திரௌபதி’ திரைப்படம், வெளிவந்தவுடன் ரசிகர்கள் மற்றும் திரை விமர்சகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. சமூக அரசியல் கருத்துகளை முன்வைத்த இந்த படம், தமிழ் திரையுலகில் சிறந்த படங்களில் ஒன்றாக விளங்கியது.


இந்த வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் மோகன் ஜி தனது புதிய படமான ‘திரௌபதி 2’-ஐ உருவாக்கியுள்ளார். படத்தின் முக்கிய கதை, நடிப்பு மற்றும் இசை அம்சங்கள் குறித்து ரசிகர்கள் முன்னே பெரும் எதிர்பார்ப்பை காட்டி வருகின்றனர்.

‘திரௌபதி 2’ படத்தின் இசையை ஜிப்ரான் அமைத்துள்ளார். அவரது இசையில் இடம்பெற்ற பாடல்களில் ஒன்று, பாடகி சின்மயி பாடிய “எம்கோனே” பாடல் ஆகும்.

பாடலின் ப்ரோமோ வெளியிடப்பட்டவுடன் சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. குறிப்பாக, சிலர் பாடல் வரிகள் பெண்களுக்கு எதிரான கருத்துகளை பரப்புகிறது என்று விமர்சனம் செய்தனர். இதனால் சமூக வலைத்தளங்களில் பரபரப்பு ஏற்பட்டது.


இதற்கு பாடகி சின்மயி தனது இன்ஸ்டாகிராம் பக்கங்களில், “இந்த பாடலை பாடியிருப்பது குறித்து நான் மனமார்ந்த மன்னிப்பை கேட்டுக்கொள்கிறேன்” என்று பதில் தெரிவித்திருந்தார். 

சமூக வலைத்தளங்களில் சர்ச்சை எழுந்த பின்னர், இயக்குநர் மோகன் ஜி தனது பார்வையை வெளிப்படுத்தியுள்ளார். அவர் கூறியதாவது, "இப்போ தான் படத்தோட முதல் பாடலே வெளியாகிருக்கு. அதுக்குள்ள படத்த காலி பண்ணனும்னு பெரிய கூட்டமே இறங்கி வேல செய்யுது. 

இந்த உண்மைய சின்மயி வாயாலயே சொன்னா நல்லாருக்கும். நான் சொன்னா குற்றச்சாட்டு ஆகிடும். வலதுசாரி சித்தாந்தம் பத்தி படம் எடுத்தா தாக்குதல் வர தான் செய்யும். அதெல்லாம் சமாளிச்சா தான் இந்த மோகன் ஜி மாதிரி நிக்க முடியும்." என்றார். இந்தக் கருத்துகள் தற்பொழுது வைரலாகி வருகின்றது. 

Advertisement

Advertisement