• Jul 03 2026

ரீ-கம்பேக் ஆரம்பம்.? முதல் முறையாக சூர்யாவுக்கு இப்படி ஒரு ரிசல்ட்.! கருப்பு மொத்த வசூல்

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான “கருப்பு” திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்து வருகிறது. இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவான இந்த படம், இந்த ஆண்டின் முக்கிய ஹிட் படங்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளது.

இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையில் உருவான “கருப்பு” படம், வெளியானதிலிருந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. குறிப்பாக மலையாளம் மற்றும் தெலுங்கு திரையுலகிலும் இந்த படம் பெரிய அளவில் பாராட்டுகளை பெற்றுள்ளது.

மே 15 அன்று திரையரங்குகளில் வெளியான “கருப்பு” திரைப்படம், உலகளவில் இதுவரை ரூ.207 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தொடர்ந்து திரையரங்குகளில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால், படம் விரைவில் ரூ.300 கோடி வசூலை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.


நீண்ட நாட்களாக ஒரு கமர்ஷியல் வெற்றிக்காக காத்திருந்த சூர்யாவுக்கு “கருப்பு” திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்துள்ளது. இதுவரை அவரது படங்களில் அதிக வசூல் செய்த படமாகவும் இது சாதனை படைத்துள்ளது.

இந்த வெற்றி, சூர்யாவின் கேரியரில் ஒரு முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement