• May 22 2026

இந்தியாவில் 60% பேர் ஜெயம் ரவியாதான் வாழ்ந்துட்டு இருக்காங்க.! இணையத்தில் வெளியான ஆதாரம்

Aathira / 1 hour ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்த நடிகராக ரவி மோகன் திகழ்ந்து வருகின்றார். இவர் ‘ஜெயம்’ படத்தில் அறிமுகமானார். அதற்கு பின் இவருடைய பல படங்கள் ரசிகர்களால் கவனிக்கப்பட்டன. ரொமான்டிக் ஹீரோவாகவே வலம் வந்தார்.

எனினும் தற்போது அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையில் ஏராளமான பிரச்சனைகள் சூழ்ந்துள்ளன. இவர் ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்தார். ஆனால் தற்போது அது கட்டாய திருமணம் எனக் கூறி பல குற்றச்சாட்டுகளை அடுக்கடுக்காக முன்வைத்துள்ளார். மேலும், அவர்களுடைய விவாகரத்து வழக்கும் நிலுவையில் உள்ளது.

இவ்வாறான நிலையில், ரவி மோகன் தன்னுடைய தோழி கெனிஷாவுடன் காட்டிய நெருக்கம் பலருக்கும் அதிருப்தியை கொடுத்தது. ஒரு கட்டத்தில் இது மிகப்பெரிய சர்ச்சையாக உருவெடுக்கவே, “நான் யாருடைய குடும்பத்தையும் பிரிக்கவில்லை. ரவியை விட்டு மொத்தமாகவே விலகிச் செல்கிறேன்” என்று கெனிஷா கூறி சென்னையை விட்டு கிளம்பி இருந்தார்.

இதைத் தொடர்ந்து, அடுத்த நாளே ரவி மோகன் பரபரப்பு பேட்டி ஒன்றை கொடுத்தார். அதில், தனக்கு ஆர்த்தி வீட்டில் நடந்தது மிகப்பெரிய கொடுமை எனவும், “பசங்களை பார்க்க விடவில்லை. எனக்கு உறுதுணையாக இருந்த கெனிஷாவையும் அனுப்பி விட்டார்கள்” என்றும் கண்ணீர் மல்க பேசியிருந்தார்.

இந்த நிலையில், ரவி மோகன் விவகாரம் தொடர்பில் பிரபல யூடியூபர் ஒருவர் அளித்த பேட்டி தற்போது வைரலாகி வருகிறது. அதில் அவர் கூறுகையில்,


ஜெயம் ரவி–கெனிஷா இஷ்யூவில் வந்து பார்த்தீங்க அப்படின்னா, “இப்படி அழுதுட்டா நீ பண்றதெல்லாம் கரெக்ட் ஆயிடுமா? நீ எப்படி இதை ஈஸியா நார்மலைஸ் பண்ணலாம்? எக்ஸ்ட்ரா மேரிட்டல் அஃபேர் உனக்கு கல்யாணம் ஆயிருக்குல்ல, அப்போ நீ அவங்க கூடதானே வாழணும்? அவன் டைவர்ஸ் பண்ணப் போறதுதானே? நீ ஏன் கெனிஷாவோட போகணும்? உனக்கு அதெல்லாம் ஒரு ஃபீலிங்கா? சும்மா நீ நடிக்காதடா. அதுவும் இல்லாம நீ சரக்கு அடிச்சிருக்க, அப்புறம் நீ வந்து கண்டதை எடுத்துருக்க, அதனாலதான் நீ அப்படி பேசி இருக்க” அப்படின்ற மாதிரி ஏகப்பட்ட நெகட்டிவ் கமெண்ட்ஸ் வந்திருந்துச்சு.

சோ, ஆம்பளையங்கன்னாலே உங்களுக்கு இடத்தளமா போச்சா அப்படின்னு கேக்கணும் போல தோணுச்சு.  ஆக்சுவலா ஜெயம் ரவி பேசுனதை நீங்க பார்த்திருப்பீங்க. அதாவது “ரவி மோகன்” தான் சொல்லணும், ஜெயம் ரவி கூட கிடையாது அப்படிங்கறதுதான்.

அவர் பேசுனதுல ரொம்ப தெளிவா ஒரு விஷயம் புரிஞ்சிருக்கும். அவர் பைனான்ஷியலா முடிவெடுக்க முடியாத நிலைல இருந்திருக்காரு. கம்ப்ளீட்டா அவருடைய இன் அண்ட் அவுட் மூவ்மென்ட்ஸ் எல்லாமே அவருடைய ஃபேமிலியை டிபெண்ட் பண்ணிதான் இருந்திருக்கு அப்படிங்கறதை பார்க்க முடிகிறது. இது ரொம்ப கொடுமையான விஷயம். இன்னைக்கு பலதரப்பட்ட ஆண்கள் சந்திக்கக்கூடிய விஷயமாதான் இது இருக்கு.

அதாவது, பொண்டாட்டி பேச்சு கேட்க வேண்டியது, இல்லன்னா மாமியார் வந்து உள்ளே வந்து ஆட்டி படைக்கிறது, அதன் மூலமா ஆண்களுக்கு அதிகமா பிரஷர் கொடுக்கப்படுது. இந்தியாவில் ஒரு 60% பேர் ஜெயம் ரவியாதான் வாழ்ந்துட்டு இருக்காங்கன்னு சொல்லலாம்.

அதுக்காக இவங்க எல்லாம் தப்பு பண்ணிட்டாங்க, ஜெயம் ரவிதான் உத்தமர் அப்படின்னு நான் பேசல. அவர் அந்த எக்ஸ்ட்ரா மேரிட்டல் அஃபேர் சைடையை நார்மலைஸ் பண்ண நான் விரும்பல. பட் இப்ப நீங்க கவனிச்சீங்கன்னா, கெனிஷா வந்து “என்ன விட்டுருங்க, நான் என் வேலையை பார்த்துட்டு போறேன்”ன்னு சொல்லி ஒரு பக்கம் போயிட்டாங்க.

இன்னொரு பக்கம் ஜெயம் ரவி, “இன்னொரு வாரத்துல எல்லா ஆதாரத்தையும் வெளியிடுறேன்”ன்னு சொல்றாரு. இன்னொரு நடிகர் கூட இவங்களுக்கெல்லாம் சம்பந்தம் இருக்கு அப்படின்னு சொல்றாங்க. மேலும், “நான் நல்ல ஹிட் கொடுத்த பையன், ஆனா என்ன ஒரே கமர்ஷியல் படம்தான் நடிக்க சொல்றாங்க” அப்படின்னு பல விஷயங்களையும் சொல்றாரு.

அதாவது அவருடைய ஃபேமிலி அவரை எப்படி டாமினேட் பண்ணுச்சு, அவருக்கு பில்லி சூனியம் வைத்திருக்காங்கன்னு கூட அவர் சொன்ன மாதிரி தெரிகிறது. மனுஷன் ரொம்ப அழுதுட்டு ஃபீல் பண்ணிட்டாரு. உடனே அதையும் “நடிக்கிறாரு”ன்னு சொல்றாங்க.

இவ்வளவு வருஷம் நடிக்க தெரிஞ்சவருக்கு இப்போ இந்த இஷ்யூவை கிரியேட் பண்ண வேண்டிய அவசியம் இல்லை. அவர் வந்திருக்காரு இந்த மாதிரி ஆட்களை எக்ஸ்போஸ் பண்ணனும் அப்படின்னு.

பட், ஜெயம் ரவி–கெனிஷாவை ஒரு ஃபிரெண்ட் அப்படின்னு சொல்லிட்டு இருந்திருந்தா ஒண்ணுமே தெரிஞ்சிருக்காது. ஆனா எல்லாரு கிட்டயும் போயி செலிப்ரேட் பண்ண மாதிரி பண்ணது தேவையில்லாத விஷயம்னு எனக்கு தோணுச்சு. அதை அவர் தவிர்த்திருக்கலாம்.

மற்றபடி, அவர் செய்யற எக்ஸ்போஸ் எல்லாமே வரட்டும். இன்னொரு விஷயம், நிறைய பேர் “இது அவங்க ரெண்டு பேருக்குள்ள ஃபேமிலி மேட்டர், இதை ஏன் எல்லாரும் டிஸ்கஸ் பண்றாங்க?”ன்னு கேட்கிறாங்க. இது பொதுவெளிக்கு வந்த பிறகு எல்லாரும் பேசத்தான் செய்வாங்க. அதுல ஒண்ணும் பண்ண முடியாது.

நிறைய நடிகைகள் ஜெயம் ரவிக்கு சப்போர்ட் பண்ணிருக்காங்க. பெண்கள் மட்டும் இல்லாம, ஆண்களுக்கும் வாழ்க்கையில் பிரச்சனைகள் நடக்குது, அவர்களுடைய லைஃப்பும் பெண்களால பாதிக்கப்படுது அப்படின்னு மீரா சோப்ரா கூட சப்போர்ட் பண்ணிருக்காங்க.

ஆனா சிலர் இன்னும் “அவர் சரக்கு அடிச்சுட்டு வந்தாரு, வேற சப்ஸ்டன்ஸ் எடுத்துருக்காரு”ன்னு குற்றச்சாட்டு வைக்கிறாங்க. இன்னும் சிலர் “இதுக்கெல்லாம் தனுஷ்தான் காரணம்”ன்னு கூட சொல்றாங்க.

ஆனா அதுக்கு எந்த ஆதாரமும் இல்லை. தனுஷுக்கு வேற வேலை இல்லையா, எல்லாரோட வாழ்க்கையில போய் ஹேக் பண்ணிக்கிட்டு இருக்காரா? அவர் பிஸியா படத்துல நடிச்சிட்டு இருக்காரே.

சுசித்ரா மாதிரி சிலரும் எல்லா இஷ்யூவுலயும் வந்து கருத்து சொல்லிட்டு இருக்காங்க. அவங்களுக்கு நல்ல பொட்டென்ஷியல் இருக்கு, நல்லா பாடுறாங்க. அதை யூஸ் பண்ணி வளரலாம். ஆனா எல்லா விஷயத்துலயும் “எனக்கு தெரியும்”ன்னு சொல்றாங்க.

இன்னொரு பக்கம் பெமினிஸ்ட் பேசுறவங்க, குஷ்பு, ராதிகா மாதிரியானவர்கள் ஒரு பக்கம் வேற மாதிரி பேசுறாங்க. திரிஷாவுக்கு சப்போர்ட் பண்றாங்க, விஜயோட விஷயத்தில் சங்கீதாவுக்கு சப்போர்ட் பண்ணல, இந்த சைட்ல ஆர்த்தி ரவிக்கு சப்போர்ட் பண்றாங்க.

இதெல்லாம் பார்க்கும்போது, ஆண்கள் மீது குடும்ப பொறுப்புகள் முழுக்க திணிக்கப்படுது. “நீதான் குடும்பத்தை பாத்துக்கணும், நீதான் எல்லாத்தையும் செய்யணும்”ன்னு சொல்லி அவர்களை அடக்குறாங்க. அதனாலதான் நிறைய பேர் மனஅழுத்தத்தில் உடைந்து போறாங்க. அதுதான் ஜெயம் ரவி விஷயத்திலும் நடந்திருக்கிறது அப்படின்னு பார்க்க முடிகிறது.

Advertisement

Advertisement