• Jan 18 2025

சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர் செய்த சாகசம்.. தண்ணி மேல நடந்துட்டாரே..! வீடியோ உள்ளே

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல் தான் சிறகடிக்க ஆசை சீரியல். இந்த சீரியல் தற்போது மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வருகின்றது.

விஜய் டிவி டிஆர்பி ரேட்டிங் முதல் இடத்தில் காணப்படும் சீரியலாக சிறகடிக்க ஆசை சீரியல் காணப்படுகின்றது. இந்த சீரியல் சமீபத்தில் தான் 500 எபிசோடுகளை கடந்த மகிழ்ச்சியை வெகுவாக கொண்டாடி இருந்தது.

சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜ் கேரக்டரில் நடிப்பவர்தான் ஸ்ரீதேவா. இவர் ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார். ஆனால் இவருக்கு பெயரையும் புகழையும் நல்ல வரவேற்பையும் பெற்றுக் கொடுத்தது சிறகடிக்க ஆசை சீரியல் தான்.

d_i_a

இந்த சீரியலில் அதிகம் படித்தவர் என்ற கர்வம் கொண்டவராக மனோஜ் காணப்பட்டாலும் ஒரு அப்பாவித்தனமான கேரக்டரில் நடித்து வருகின்றார். இவருடன் இருக்கும் மனைவியே இவருக்கு துரோகம் செய்கின்றார். ஆனாலும் அதை கண்டுபிடிக்க முடியாத ஒரு அப்பாவி தனத்தில் மனோஜ் காணப்படுகின்றார்.

மேலும் செய்வினை, சூனியம், ஜோசியம் என்பவற்றை நம்பி பிச்சை எடுத்த கேரக்டராகவும் மனோஜ் கேரக்டர் காணப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் தனது அண்ணன் தம்பியையே மட்டம் தட்டும் ஒரு நபராக காணப்படுகின்றார்.


இந்த நிலையில், நடிகர் ஸ்ரீ தேவா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஸ்விம்மிங் பூல் பக்கத்தில் நின்று தான் தண்ணீர் மீது நடக்க உள்ளதாக தெரிவிக்கின்றார். இதை பார்த்த ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்க இறுதியில் தண்ணீரை எடுத்து பக்கத்தில் இருந்த படிக்கட்டில் ஊற்றிவிட்டு அதற்கு மேலே நடக்கின்றார்.

இதனால் சீரியலிலும் மனோஜ்க்கு குசும்பு நிஜத்திலும் குசும்பு என ரசிகர்கள் கமெண்ட் பண்ணி வருவதோடு பஞ்சபூதங்களையும் நீங்க ட்ரை பண்ணி பாருங்க என்று கமெண்ட் பண்ணி வருகின்றார்கள்.

Advertisement

Advertisement