• Jan 19 2025

சித்தார்த் - அதிதி ராவின் UNSEEN வெடிங்க் போட்டோஸ்.. செம க்யூட்டான ஜோடி தான்

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

நடிகர் சித்தார்த் - நடிகை அதிதி ராவ் இருவரும் காதலித்து வந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் ஹைதராபாத்தில் உள்ள பழமையான கோவிலில் திருமணம் செய்து கொண்டார்கள். இருவருக்குமே இது இரண்டாவது திருமணமாக காணப்படுகின்றது.

மகா சமுத்திரம் என்ற படத்தில் பணியாற்றும் போதே இருவருக்கும் இடையில் நட்பு மலர்ந்தது. அதன் பின்பு அது காதலாக மாறியது. நீண்ட காலமாக காதலித்த இவர்கள் திருமணம் செய்வதாக அறிவித்தார்கள். இது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்தது.

d_i_a

அதிதி ராவின் முன்னோர்கள் ராஜ பரம்பரையை சேர்ந்தவர்கள் என கூறப்படுகின்றது. இதன் காரணத்தினாலே ஹைதராபாத்தில் உள்ள புராதான கோவிலில் உறவினர் மற்றும் நெருங்கிய வட்டாரத்துடன் இவர்களுடைய திருமணம் நடைபெற்றது.


இந்த நிலையில், நடிகர் சித்தார்த் - நடிகை அதிதி ராவின்  திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களில் யாரும் பார்க்காத புதிய புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார்கள். 


இதை பார்த்த ரசிகர்கள் அதில் அதிதி அணிந்திருக்கும் உடையையும் சித்தாத்தின் கபீரத்தையும் பார்த்து தமது கருத்துக்களை முன்வைத்து வருவதோடு அவர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றார்கள்.

Advertisement

Advertisement