• Jul 09 2025

அப்பா திரும்ப வந்த மாதிரி இருந்துச்சு! 'படை தலைவன்’ வெற்றிக்குப் பின் கண்கலங்கிய நடிகர்..

subiththira / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 2015ம் ஆண்டு வெளியான “சகாப்தம்” படத்தின் மூலம் அறிமுகமான சண்முக பாண்டியன், மூத்த நடிகரும், புகழ்பெற்ற அரசியல்வாதியுமான கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மகன். அந்த அறிமுகத்துக்குப் பிறகு பெரிய இடைவெளிக்குப் பின், நேற்று திரையரங்குகளில் வெளியான “படை தலைவன்” திரைப்படம் மூலம் கம்பேக் கொடுத்துள்ளார்.


இப்படம், வீரம், குடும்பம் எனப் பல பரிமாணங்களை கொண்ட திரைப்படமாக அமைந்துள்ளது. இதில் AI தொழில்நுட்பத்தின் மூலம், மறைந்த நடிகர் விஜயகாந்த் திரையில் மீண்டும் காட்சியளித்திருப்பது ரசிகர்களை மட்டுமல்ல, அவரது குடும்பத்தினரையும் உணர்ச்சியில் ஆழ்த்தியிருந்தது.

“படை தலைவன்” வெளியான பிறகு, செய்தியாளர்களை சந்தித்த சண்முக பாண்டியன், தனது வாழ்நாளின் பெரிய தருணமாக இந்த நாளைக் குறிப்பிட்டார். அதனுடன், திரைப்படத்தில் தனது தந்தையின் காட்சியை பார்த்த போது ஏற்பட்ட உணர்வுகளை பகிர்ந்தபோது அவர் கண்கலங்கினார்.


சண்முக் பாண்டியன் மேலும், “அப்பா போனதுக்குப் பிறகு என் அம்மா ரொம்ப நாளாக சந்தோசமா இருக்கல. நேற்று படம் வெளியான பிறகு... அம்மா சின்ன சிரிப்போட இருந்தாங்க. அது வாழ்க்கையில் புது தொடக்கம் போல இருந்தது." எனத் தெரிவித்திருந்தார். இத்தகவல்கள் தற்பொழுது வைரலாகி வருகின்றன.


Advertisement

Advertisement