• Jan 19 2025

"கருடன் திரைப்படத்தை வெற்றிப்படமாக்கிய உங்கள் அனைவருக்கும் நன்றி" ! - நடிகர் சூரி வெளியிட்ட வீடியோ.

Thisnugan / 6 months ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் கிடைக்கும் வாய்ப்புகளை சரிவர பயன்படுத்துவதன் மூலம் தனக்கான இடங்களை பிடித்த நடிகர்கள் வரிசையில் குறிப்பிடத்தக்கவர் நடிகர் சூரி.சிறு சிறு பாத்திரங்களில் தோன்றிய போதும் பரோட்ட காமெடி அவரை பலருக்கும் அறிமுகம் செய்ய தொடர்ந்து கிடைத்த வாய்ப்புகளை சரிவர பயன்படுத்தி முன்னணி நகைச்சுவை நடிகராகவும் ஆனார் சூரி.


நகைச்சுவை நடிகராக வலம் வந்த சூரி யாரும் எதிர்பாரா விதமாய் வெற்றி மாறன் இயக்கத்தில் விடுதலை பாகம் ஒன்றில் கதாநாயகனாக அறிமுகமானார்.வெற்றி மாறனின் தேர்வை பாராட்டும் விதத்தில் அமைந்திருந்தது விடுதலை படத்தில் சூரியின் நடிப்பு.அடுத்தடுத்து கதாநாயகனாக திரைக்கு அழைக்கப்பட்ட சூரியின் அடுத்த படமான "கருடன்" வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடியது.


இந்நிலையில் "கருடன்" படத்தின் வெற்றிக்கு ரசிகர்களின் துணை பெரிதும் உதவியது என அனைவருக்கும் நன்றி சொல்லி வீடியோ வெளியிட்டிருக்கும் நடிகர் சூரி படத்தை திரையரங்குகளில் காண முடியாதவர்கள் அமேசான் பிரேம் செயலியில் காணமுடியும் என்பதை அறிவித்திருந்ததோடு திரையரங்கு போலவே அமேசான் பிரேமிலும் வெற்றி படமாக மாற்ற வேண்டும் என ரசிகர்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.


Advertisement

Advertisement