• Mar 25 2023

காசு கொடுத்துப் படம் பார்த்த எல்லோருக்கும் நன்றி... எனது 12 வருட கனவை நனவாக்கிட்டீங்க.. மனம் திறந்து பேசிய கவின்...!

Prema / 2 weeks ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் புகழ் கவின் மற்றும் அபர்ணா தாஸ் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் 'டாடா'. இப்படமானது மக்களிடம் சிறந்த வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல் அமோக வசூலையும் வாரிக் குவித்தது. இதனையடுத்து இப்படம் இன்று OTT இல் வெளியாக இருக்கின்றது. இது குறித்து க்வின் தற்போது எமோஷனலாக பேசியுள்ளார்.


அதாவது "டாடா படம் prime video இன்று ரிலீஸ் ஆகின்றது. திரையரங்குகளில் நீங்க எனக்கு கொடுத்த சப்போர்ட் நான் நினைத்ததை விட ரொம்ப ரொம்பப் பெரிசு. இது என்னோட 12 வருடக் கனவு.  அதனை நனவாக்கின எல்லோருக்குமே எனது நன்றிகள். 


காசு கொடுத்து தியேட்டருக்கு போய் படம் பார்த்த ஒவ்வொருத்தருக்குமே எனது நெஞ்சார்ந்த நன்றிகள். ஏனெனில் எல்லோருமே கஷ்டப்பட்டு வேலை செய்கிறோம். நல்ல படத்தை எப்போதுமே மக்கள் காப்பாத்துவாங்க என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபிச்சு இருக்கீங்க. அதற்கும் எனது நன்றிகள். 


தியேட்டரில் கிடைத்த வரவேற்பு OTT யிலும் இன்னும் சூப்பராக கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு இருக்கோம்" என மனம் திறந்து மிகவும் உருக்கமாக பேசியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement