• Apr 01 2023

வெளியானது விடுதலை படத்திற்காக இளையராஜா பாடிய 'அருட்பெருஞ்ஜோதி' பாடல்.. ப்பா செமயா இருக்கே..வீடியோ இதோ..!

Prema / 3 weeks ago

Advertisement

Listen News!

வெற்றிமாறன் இயக்கத்தில் தற்போது உருவாகியிருக்கும் படம் 'விடுதலை'. வஇப்படத்தில் விஜய் சேதுபதி, சூரி உள்ளிட்ட ஏராளமானோர் நடிக்கின்றனர். மேலும் இந்தப் படமானது ஜெயமோகனின் துணைவன் என்ற சிறுகதையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. 


அதுமட்டுமல்லாது விடுதலை படத்திற்கு இசைஞானி இளையராஜா தான் இசையமைத்து உள்ளார். இப்படத்தின் உடைய மாபெரும் இசை வெளியீட்டு விழா கடந்த சில தினங்களுக்கு முன் நடந்த நிலையில், அப்படத்தின் லிரிக்கல் வீடியோ ஒவ்வொன்றாக தற்போது யூடியூப்பில் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன.


இந்நிலையில் தற்போது அப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘அருட்பெருஞ்ஜோதி’ என்கிற பக்திப் பாடலின் லிரிக்கல் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டு உள்ளனர். இப்பாடலுக்கு இளையராஜா இசையமைத்துள்ளதோடு அப்பாடலையும் அவரே பாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வீடியோ ஆனது தற்போது யூடியூபில் பயங்கர டிரெண்டாகி வருகிறது.


Advertisement

Advertisement

Advertisement