மெரினா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தொடர்ந்து பல ஹிட் படங்களை வழங்கி தற்பொழுது முன்னனி நடிகராக சிவகார்த்திகேயன் தனக்கென ஒரு இடத்தை நிலைநாட்டியுள்ளார். உண்மை கதையாகிய அமரன் திரைப்படத்தில் மிகவும் உணர்வுபூர்வமாக நடித்து ரசிகர்களின் மனதை வென்ற இவர் தற்போது ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் "மதராசி " மற்றும் சுதா கெங்கார இயக்கத்தில் "பராசக்தி " போன்ற படங்களில் நடித்து வருகின்றார்.
இந்த நிலையில் நேற்றைய தினம் தனது பிறந்தநாளினை மிகவும் சிம்பிளாக கோவிலில் கொண்டாடிய இவரை சினிமா பிரபலங்கள் ரசிகர்கள் என பலர் வாழ்த்தியிருந்தனர். தற்பொழுது தனது இந்த விசேட நாளில் வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றி செலுத்தும் முகமாக நன்றி கடிதம் ஒன்றினை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
குறித்த கடிதத்தில் " நீங்கள் தரும் அன்பை இரட்டிப்பாக திருப்பி தர முன்பை விட இன்னும் அதிகமாக உழைப்பேன் "என மிகவும் அழகாக கூறியுள்ளார்.மற்றும் தனது படக்குழு நண்பர்கள் ரசிகர்கள் அனைவருக்கும் மிகவும் அழகாக தனது நன்றியினை கூறியுள்ளார்.
Listen News!