'லியோ' திரைப்படத்தின் வெற்றி விழா ஆரம்பமான நிலையில், ரசிகர்களின் ஆரவாரத்திற்கு மத்தியில் தளபதி விஜய் வீறுநடை போட்டு குறித்த விழாவிற்கு வருகை தந்துள்ளார்.
குறித்த வெற்றி விழாவில் பங்கு கொண்டுள்ள பிரபலங்களின் வருகை மற்றும் அவர்களது புகைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகிறது.
தளபதி விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்தின் வெற்றி விழா, இன்று மாலை 6 மணிக்கு நேரு ஸ்டேடியத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள், கடந்த ஒரு வாரமாக நடந்து வரும் நிலையில், அதிகப்படியான கூட்டங்கள் கூடுவதை தவிர்க்கவும், அசம்பாவிதங்கள் நேராமல் இருக்கவும் பொலிசாரால் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், இன்றையத் தினம் நடைபெறும் 'லியோ' சக்ஸஸ் மீட்டில் தளபதி விஜய் என்ன பேசுவார் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
அதேவேளை, லியோ சக்ஸஸ் நடக்கும் அரங்கம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அரங்கில் கூடியுள்ள ரசிகர்களும் லைட் அடித்து தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்கள்.






Exclusive: Special Digital Boards Placed for welcoming Thalapathy Vijay 🥵🔥#LeoSuccessMeet pic.twitter.com/ufJy9zRiMy
 
                              
                             
                             
                            _654256bdd69c5.png) 
                                                    _654268417f050.jpg) 
                                                     
                                             
                                             
                                             
                                                 
                                                 
                                                 
                                                 
                                                _690456f9b76d3.jpg) 
                                                _6904592b9b305.jpg) 
                                                 
                                                _690351c67ee5f.jpg) 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                .png) 
                .png) 
                 
                 
                 
                
Listen News!