• Oct 09 2024

பிக்பாஸ் ஜனனிக்கு அடித்த மற்றொரு அதிர்ஷ்டம்! பெரும் உற்சாகத்தில் ரசிகர்கள்

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் புகழ் ஜனனி தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பிற்கான பணிகளை ஆரம்பித்துள்ளார். இதனை தனது எக்ஸ் தளத்தில் புகைப்படமொன்றை பதிவேற்றி உறுதி செய்துள்ளார். அதன்படி அவர் குறித்த படப்பிடிப்பு பூஜையின் போது எடுத்த புகைப்படம் தற்போது இணையத்தினை ஆக்கிரமித்துள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு 'லியோ' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு ஜனனிக்கு கிடைத்தது. லியோ திரைப்படம் தொடர்பில் கலவையான விமர்சணங்களைப் பெற்றாலும் ஜனனியின் நடிப்பு பாராட்டை பெற்றுள்ளது.


அதன் அடிப்படையில், லியோபடம் ஜனனிக்கு மிகப் பெரிய திருப்பு முனையை அவரது வாழ்க்கையில் ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், முதல் படமே விஜய்யின் படம் என்பதால் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பு மிகவும் அதிகமாக இருந்தது.

இந்நிலையில், லியோ படத்தினை தொடர்ந்து ஈழத்து பெண்ணான  ஜனனிக்கு படவாய்ப்புகள் குவிந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Advertisement