பிரபல இயக்குநர் எஜ் .வினோத் இயக்கத்தில் தளபதி விஜய் மற்றும் பூஜா கெட்ஜ் நடித்து வரும் தளபதி 69 படத்தின் படப்புடிப்புகள் மிகவும் விறு விறுப்பாக நடந்து வருகின்றது.கடந்த அக்டோபர் மாதம் ஆரம்பமாகிய இப்படப்பிடிப்புகளின் முதலாவது கட்ட வேலைகள் இன்றுடன் முடிவடைந்துள்ளதுடன் மிகுதி இருக்கும் பகுதிகளினை அடுத்த வருடம் தை முதலாம் திகதி ஆரம்பிக்கவுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
அநேகமான விஜயின் படங்கள் வெளியூர்களில் படமாக்கப்பட்டும் ஆனால் இப்படம் சென்னையில் படமாக்கப்படுவதுடன் இந்த 10 நாட்கள் இடைவெளியின் பின் தொடர்ந்து 45 நாட்கள் படமாக்கப்பட உள்ளதாகவும் வருகின்ற பெப்ரவரி மாதம் படப்பிடிப்பினை முழுவதுமாக முடிக்கவுள்ளதாகவும் படக்குழுவினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.
அரசியல் பக்கம் தனது கவனத்தினை அதிகம் செலுத்திவரும் விஜய் இப்படத்தின் படப்புடிப்புகளை ரிலாக்ஸாக முடிக்கும்படி கூறியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
Listen News!