• Jan 19 2025

திடீரென தமிழக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்த தளபதி விஜய்.. என்ன காரணம்?

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

கள்ளக்குறிச்சி அருகே விஷச்சாராயம் குடித்து 30 பேர் பலியானதாக வெளிவந்திருக்கும் தகவல் தமிழகம் மட்டும் இன்றி இந்தியாவையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் விஷச்சாராய மரணம் குறித்து தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் சமீபத்தில் புதிய அரசியல் கட்சி தொடங்கிய விஜய்யும் தனது சமூக வலைதளத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். அந்த கண்டன அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கள்ளச் சாராயம் அருந்திய 25க்கும் மேற்பட்டோர் காலமான செய்தி, மிகுந்த அதிர்சியையும் மன வேதனையையும் அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதோடு, உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் முழு உடல்நலம் பெற இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.

கடந்த ஆண்டு இதே நிகழ்வு காரணமாகப் பல உயிர்களை இழந்த துயரத்தில் இருந்து இன்னும் முழுமையாக மீளாத நிலையில், மீண்டும் இப்படியொரு சம்பவம் நிகழ்ந்திருப்பது, அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தையே காட்டுகிறது.

இது போன்ற சம்பவங்கள் நிகழாத வண்ணம், இனிமேலாவது தமிழக அரசு கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு தடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

Advertisement

Advertisement