சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள திரைப்படத்தில் பாலிவுட் நட்சத்திர ஜோடிகளான தீபிகா படுகோனே மற்றும் ரன்வீர் சிங் முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் ’வேட்டையன்’ என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் அடுத்ததாக அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ’தலைவர் 171’ என்ற படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் டைட்டில் உடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டர் இம்மாதம் 22ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்திற்கு ’கழுகு’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்த படம் ஒரு பான் இந்தியா திரைப்படமாக உருவாக இருப்பதால் இந்த படத்தில் இந்திய திரையுலகில் உள்ள முக்கிய நட்சத்திரங்கள் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக தற்போது வந்துள்ள தகவல்படி தீபிகா படுகோன் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடிப்பார் என்றும், ரன்வீர் சிங் இந்த படத்தில் ஒரு மாஸ் கேரக்டரில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் தென்னிந்திய திரை உலகில் உள்ள நட்சத்திரங்களும் இந்த படத்தில் இணைய இருப்பதாகவும் இந்த படம் இதுவரை வெளியான ரஜினியின் படங்களில் அதிக பட்ஜெட் உள்ள படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
மொத்தத்தில் ’தலைவர் 171’ படம் குறித்த தகவல்கள் வேற லெவலில் இருக்கும் நிலையில் இந்த படத்தின் எதிர்பார்ப்பும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் திரைக்கதை எழுதும் பணியை லோகேஷ் கனகராஜ் முடித்து விட்டதாகவும் வரும் ஜூன் மாதம் முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
Listen News!