• Jan 19 2025

ஒரே ஒரு வீடியோ ஹிட்.. சம்பளத்தை 5 கோடியாக உயர்த்திய தமன்னா. அதிர்ச்சியில் தயாரிப்பாளர்கள்..!

Sivalingam / 10 months ago

Advertisement

Listen News!

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் வெளியான வைரல் வீடியோ காரணமாக திடீரென தனது சம்பளத்தை நடிகை தமன்னா 5 கோடியாக உயர்த்தி விட்டதாக கூறப்படுவது தயாரிப்பாளர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்தஜெயிலர்திரைப்படத்தில் தமன்னா ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடி இருப்பார் என்பதும்காவாலாஎன்ற இந்த பாடலுக்காக மட்டும் அவர் ஒரு கோடிக்கு மேல் சம்பளம் வாங்கியதாகவும் கூறப்பட்டது.

தமன்னா ஒரு திரைப்படத்திற்கே ஒரு கோடி சம்பளம் வாங்கி வரும் நிலையில் ஒரு பாடலுக்கு மட்டுமே ஒரு கோடி சம்பளம் கொடுத்தனர் என்றாலும்  அந்த பாடல் சூப்பர் ஹிட் ஆனது என்பதும்ஜெயிலர்படத்தின் வெற்றிக்கு அந்த பாடலும் ஒரு காரணம் என்று கூறப்பட்டது.



இந்த பாடல் பட்டிதொட்டி எங்கும் ஹிட்டானது என்பது மட்டுமின்றி இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக .வலைதளங்களில் பல பிரபலங்கள் இந்த பாடலுக்கு நடனமாடிய வீடியோவை பதிவு செய்தார்கள் என்பதும் அதனால் படத்திற்கு மிகப்பெரிய விளம்பரம் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் காவலா பாடலுக்கு ஒரு யானை நடமாடிய வீடியோ வெளியானதை அடுத்து இந்த வீடியோவை பார்த்து ஆச்சரியம் அடைந்த தமன்னா தன்னுடைய பாடல் எந்த அளவுக்கு மக்கள் மத்தியில் சேர்ந்து உள்ளது என்று முடிவு செய்து ஒரு கோடி வாங்கிய சம்பளத்தை 5 கோடியாக அதிகரித்து விட்டதாக கூறப்படுகிறது.

தன்னிடம் வரும் தயாரிப்பாளர்களிடம்ஜெயிலர்படத்தின் வெற்றிக்கு நான் தான் காரணம் என்றும் இந்த யானை வீடியோவிலிருந்து அதை நீங்கள் தெரிந்து கொள்ளலாம் என்றும் எனவே ஐந்து கோடி சம்பளம் கொடுத்தால் மட்டுமே நடிப்பேன் என்றும் கூறி வருகிறாராம்.

இதனால் தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி அடைந்து துண்டைக் காணும் துணியை காணும் என்று ஓடிக் கொண்டிருப்பதாகவும் புதுமுக நடிகைகளை கமிட் செய்தால் ஒரு சில லட்சத்தில் சம்பளம் முடிந்து விடும் என்றும் அவர்கள் கூறி வருகின்றனர்.



Advertisement

Advertisement