பிக் பாஸ் சீசன் 7ல் பங்கு பற்றிய போட்டியாளர்களுள் ஒருவர் தான் சரவணன் விக்ரம். இவர் பாண்டியன் ஸ்டோர் சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர்.
பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடித்துக் கொண்டு இருந்த சரவணன் விக்ரமுக்கு, பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு கிடைத்தது. இதனால் குறித்த சீரியலில் இருந்து விலகி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
எனினும், பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் அதிகமாக ரசிகர்களால் ட்ரோல் செய்யப்பட்ட போட்டியாளராக சரவணன் விக்ரம் தான் காணப்படுகிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த நிலையிலும் சரவணன் விக்ரமை வைத்து தான் அதிகளவான மீம்ஸ், ட்ரோல், கமெண்ட்ஸ் என்பனவும் குவிக்கப்பட்டு வருகின்றன.
பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது மாயாவும் பூர்ணிமாவும் சேர்ந்து சரவணன் விக்ரமுக்கு கரப்பான் பூச்சி என்ற பெயர் வைத்து கலாய்த்து வந்தார்கள். ரசிகர்கள் தற்போது வரையில் அதை வைத்து தான் கலாய்த்து வருகின்றார்கள்.
பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது சரவணன் விக்ரம், எந்த கருத்துக்களையும் பெரிதாக சொல்லாமலும், நிறைய இடங்களில் பேசாமல் இருந்ததாலும், ரசிகர்கள் அவரை மிக்சர் என்றும் அழைத்தனர்.
அதே நேரம், பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது சரவணன் விக்ரம் தன்னைத் தானே டைட்டில் வின்னர் என்று சொல்லி வந்தார். அதையும் வைத்து கொடூரமாக கலாய்க்கப்பட்டார்.
இந்த நிலையில், தற்போது சரவண விக்ரம் நீண்ட முடி மற்றும் தாடி வைத்து ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறி இருக்கிறார். குறித்த புகைப்படங்களை தனது இன்ஸ்டரா பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.
Listen News!