• Jan 19 2025

வாழ்க்கையில் செட்டில் ஆகிறாரா ரஜினி காந்த்? ஏழைகளுக்கு இலவச ஹாஸ்பிடல் கட்டுவதில் மும்முரம்

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

தற்போது சமூக வலைத்தளத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மருத்துவமனை கட்டப் போவதாக கூறிய விஷயம் தான் பேசுபொருளாக உள்ளது.

அதன்படி தாழம்பூர் செல்லும் வழியில் 12 ஏக்கர் நிலம் வாங்கி உள்ளாராம் ரஜினிகாந்த். இதற்காக திருப்போரூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் நேற்றைய தினம் பத்திரப்பதிவு பதியப்பட்டுள்ளது.

இவ்வாறு குறித்த நிலத்தை பதிவு செய்வதற்காக ரஜினிகாந்த் சென்றுள்ளதால், அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சுமார் காலையில் ஒரு மணித்தியாலத்திற்கு உள்ளேயே வேலையை முடித்துவிட்டு மீண்டும் கிளம்பி சென்றுள்ளார் ரஜினிகாந்த்.


இவ்வாறு ரஜினிகாந்த் வரும் தகவலை அறிந்த ரசிகர்கள் அனைவரும், அவரை பார்ப்பதற்காக சார்பதிவாளர் அலுவலகத்தில் கூடி இருந்துள்ளார்கள். இதன்போது தனக்காக காத்திருந்த  ரசிகர்களை பார்த்து சிரித்தபடி சென்றுள்ளார் ரஜினிகாந்த்.

இந்த நிலையில், தற்போது 12 ஏக்கர் நிலத்தில் ரஜினி கட்டவிருக்கும் மருத்துவமனை குறித்து தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

அதாவது, ஏழைகளுக்கு பணம் வாங்காமல் அவர்களுக்கு இலவசமாக மருத்தும் பார்க்கப்படும் என கூறப்பட்டுள்ள அதே சமயம், வசதி படைத்தவர்களிடம் கட்டணம் வாங்கிக் கொண்டே சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்றும் ரஜினி  கூறி உள்ளாராம்.

இதனால் ரஜினி ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளார்கள். தற்போது இந்த சம்பவம் பேசுபொருளாக மாறியுள்ளது.

Advertisement

Advertisement