• Jun 28 2024

’அரண்மனை 4’ படத்தால் பிரச்சனை.. ராஷி கண்ணாவை வீட்டுக்கு அழைத்து திக்குமுக்காட வைத்த தமன்னா..!

Sivalingam / 3 days ago

Advertisement

Listen News!

சமீபத்தில் வெளியான தமன்னா மற்றும் ராஷி கண்ணா நடித்த ’அரண்மனை 4’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் கதையில் இருவருக்குமே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருந்தாலும் இருவரில் யார் அதிக ஸ்கோர் செய்தார்கள் என்ற போட்டி இருதரப்பு ரசிகர்கள் மத்தியில் ஒரு பெரும் விவாத பொருளாக மாறியது.

சுந்தர் சி இந்த படத்தின் கதையில் இருவருக்கும் சம அளவுக்கு கொடுத்து இருந்தாலும் தமன்னாவுக்கு தான் அதிக முக்கியத்துவம் இருந்ததாக விமர்சனங்கள் கூறிய நிலையில் ராஷி கண்ணா தரப்பு அதிருப்தி அடைந்தது. இதனால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில் தமன்னா இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்க முடிவு செய்தார்.

இதனை அடுத்து ராஷி கண்ணாவை தனது வீட்டிற்கு விருந்திற்கு அழைத்ததாகவும் அப்போது அவர் ராஷி கண்ணாவே எதிர்பார்க்காத வகையில் பல்வேறு உணவு வகைகளை விருந்தில் வைத்து அவரை திக்கு முக்காடு செய்ததாகவும் இதனை அறிந்து ராஷி கண்ணா மகிழ்ச்சி அடைந்ததாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து தமன்னா  கூறியபோது ’அரண்மனை 4’ படத்தில் எங்கள்  இருவருக்கும் போட்டி இருந்தது உண்மைதான், ஆனால் அது ஆரோக்கியமான போட்டி என்றும், ஆனால் அதே நேரத்தில் நாங்கள் இருவரும் நெருங்கிய தோழிகள் என்றும் அவர் கூறியுள்ளார். இதனை அடுத்து தமன்னா - ராஷி கண்ணா இடையே கருத்து வேறுபாடு என்ற வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement