அஜித் நடித்து வரும் ’குட் பேட் அக்லி’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் சமீபத்தில் முடிவடைந்தது என்பது தெரிந்தது. தற்போது அஜித் ’விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பில் இருக்கும் நிலையில் அந்த படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பியதும் அவர் மீண்டும் ஹைதராபாத்துக்கு ’குட் பேட் அக்லி’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஒரு பக்கம் ’குட் பேட் அக்லி’ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்கு இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் பணிகளை செய்து வரும் நிலையில் இன்னொரு பக்கம் இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகளையும் தேர்வு செய்து வருவதாக கூறப்படுகிறது. அந்த வகையில் இந்த படத்தில் பிரபல காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லி இணைவதாக தெரிகிறது. அவரிடம் பேச்சுவார்த்தை முடிந்து விட்டதாகவும் அஜித்துடன் அவர் படம் முழுவதும் ட்ராவல் செய்யும் கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ரெடின் கிங்ஸ்லி இந்த படத்தில் இணைவது தெரிந்தவுடன் அஜித் நேரடியாக நெல்சன் இடம் பேசியதாகவும், அவரை பற்றி சில விஷயங்களை கேட்டு தெரிந்து கொண்டதாகவும் நெல்சனும் ரெடின் குறித்து நல்லவிதமாக கூறி அவர் இந்த படத்திற்கு கண்டிப்பாக உங்களுக்கு உதவியாக இருப்பார் என்று கூறியதாகவும் தெரிகிறது. இதனையடுத்தே ரெடின் கிங்ஸ்லி ’குட் பேட் அக்லி’ படத்தில் இணைய அஜித் ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
பொதுவாக அஜித் தனது படத்தில் புதிதாக ஒருவர் இணைகிறார் என்றால் அவரைப் பற்றி அவருக்கு நெருக்கமானவர்களிடம் விசாரிப்பார் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் தான் ரெடிங் கிங்ஸ்லி பற்றி நெல்சன் இடம் விசாரித்ததாகவும் அஜித் - நெல்சன் உரையாடல் சமூகமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.
Listen News!