• Mar 14 2025

ரசிகர்களை ரகசியமாக சந்தித்த சூர்யா.. ஏதேனும் அரசியல் திட்டமா?

Sivalingam / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி உறுப்பினர்களை சேர்க்க தொடங்கிவிட்ட நிலையில் விஷாலும் விரைவில் அரசியல் கட்சி தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் நடிகர் சூர்யா சென்னையில் தனது ரசிகர்களை ரகசியமாக சந்தித்து ஒரு மீட்டிங் நடத்தியதாகவும் இந்த மீட்டிங்கில் எதிர்காலத்தில் அரசியலில் குதிப்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

நடிகர் சூர்யா தமிழகம் முழுவதிலும் உள்ள தனது ரசிகர் மன்ற முக்கிய நிர்வாகிகள் மற்றும் ரசிகர்களை வரவழைத்து அவர்களுடன் புகைப்படம் எடுத்து கொள்ள முடிவு செய்துள்ளார். முதல்கட்டமாக  சென்னை, நெல்லை ஆகிய பகுதிகளில் மழை வெள்ளத்தில் உதவி செய்த தனது ரசிகர் மன்றத்தினரை வரவழைத்து அவர்களுக்கு விருந்தளித்து பாராட்டி மகிழ்ந்ததோடு அவர்களுடன் சில முக்கிய ஆலோசனையும் சூர்யா செய்துள்ளதாக தெரிகிறது.

இந்த ஆலோசனையின் போது ரசிகர்கள் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்ரோலக்ஸ்படத்தில் நடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாகவும், அப்படி ஒரு ஐடியா இருக்கிறது, மிக விரைவில் அது குறித்து அறிவிப்பு வரும் என்று ரசிகர்களிடம் சூர்யா கூறியதாகவும் தெரிகிறது.

மேலும் அரசியல் கட்சி ஆரம்பிப்பது அல்லது ஏதாவது ஒரு அரசியல் கட்சியில் இணைவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டதாகவும் ரசிகர்களும் அதற்கு தாங்கள் முழு ஆதரவு தருவதாக உறுதி அளித்ததாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் சூர்யா குடும்பத்தினர் அரசியல் வேண்டாம் என்று தெரிவித்து வருவதாகவும் சூர்யாவுக்கு மட்டும் அந்த ஆசை இருப்பதாகவும் கூறப்படுகிறது.

எதிர்காலத்தில் சூர்யா அரசியலுக்கு வருவாரா சொந்த கட்சி தொடங்குவாரா? அல்லது ஏதேனும் ஒரு கட்சிகள் இணைந்து அரசியலில் ஈடுபடுவாரா? அல்லது அவர் அரசியலில் ஈடுபட இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் வதந்தியா? என்பதை எல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Advertisement

Advertisement