• Mar 13 2025

விஜய் கட்சியில் இருந்து வந்த முதல் அறிக்கை.. பாஜகவை நேரடியாக எதிர்க்கும் விஜய்?

Sivalingam / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் இதுவரை அவர் வெளியிட்ட அறிக்கைகள் தனது கட்சி தொண்டர்களுக்கு மட்டுமே இருந்த நிலையில் தற்போது முதல் முறையாக பொது பிரச்சனைக்காக குரல் கொடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மத்திய அரசு நேற்று சிஏஏ சட்டத்தை அமல்படுத்துவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்த நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து குரல் கொடுத்து வருகின்றன. அந்த வகையில் தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் இந்த சட்டத்திற்கு எதிராக அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சமூக நல்லிணக்கத்துடன் நாட்டு மக்கள் அனைவரும் வாழும் சூழலில், பிளவுவாத அரசியலை முன்னிறுத்தி செயல்படுத்தும் இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் 2019 போன்ற எந்த சட்டமும் ஏற்கத்தக்கது அல்ல. தமிழ்நாட்டில் சட்டத்தை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று ஆட்சியாளர்கள் உறுதி அளிக்க வேண்டும் என்று விஜய் தன் பெயரிலேயே வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியை சிஏஏ சட்டத்தை அமல்படுத்திய சில மணி நேரங்களில் விஜய்யிடம் இருந்து இந்த அறிக்கை வெளிவந்துள்ளதை பார்க்கும்போது அவர் பாஜகவுக்கு எதிராக குரல் கொடுக்க தயங்க மாட்டார் என்று தெரிகிறது. அதேபோல் தமிழகத்தில் உள்ள ஆட்சியாளர்களும் இந்த சட்டத்தை அனுமதிக்க கூடாது என்று கூறுவதில் இருந்து தமிழக ஆளும் கட்சியையும் எதிர்க்க அவர் தயங்க மாட்டார் என்பது தெரிகிறது.

 
மொத்தத்தில் விஜய் அரசியல் களத்தில் முழுமையாக இறங்கி விட்டார் என்பதையே இந்த அறிக்கை காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

Advertisement

Advertisement