• Sep 19 2024

கமலின் விக்ரம் படத்தில் இணைந்த சூர்யா-யாரும் எதிர்பார்க்காத மற்றுமொரு ட்விஸ்ட்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் ஹாசன் நடித்து உருவாகி வரும் திரைப்படம் விக்ரம். இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிரூத் இசையமைக்கின்றார். அத்தோடு ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்பில் இந்த திரைப்படம் உருவாகியும் உள்ளது.

இப்படத்தில் கமலுடன் இணைந்து விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம், நரேன் ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்தின் ட்ரைலர் மற்றும் இசை இரண்டும் வருகிற மே 15ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்நிலையில், ரசிகர்கள் அனைவருக்கும் சர்ப்ரைஸ் ஷாக் கொடுக்கும் விதமாக தகவல் ஒன்று கசிந்துள்ளது.

அதன்படி, விக்ரம் படத்தில் கமல் ஹாசனுடன் இணைந்து தமிழ் சினிமாவின் டாப் நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி கவுரவ கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும் விக்ரம் படம் குறித்து தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரிதும் இந்த செய்தி பேசப்பட்டு வருகிறது. இந்த தகவல் உண்மையா இல்லையா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement