• Apr 02 2025

சூர்யா பெயரே பாலிவுட்டில் உள்ளவர்களுக்கு தெரியலையா? லோகேஷ் கனகராஜ் செய்த சம்பவம்..!

Sivalingam / 1 year ago

Advertisement

Listen News!

ஜோதிகா நடித்தசைத்தான்திரைப்படம் இன்று வெளியாகி உள்ள நிலையில் நேற்று இந்த படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் ஜோதிகாவுடன் சூர்யா கலந்து கொண்ட போது சூர்யாவை அந்த விழாவுக்கு வந்திருந்த ரசிகர்கள்ரோலக்ஸ் ரோலக்ஸ்என்று அழைத்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இது குறித்து வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

கமல்ஹாசன் நடித்தவிக்ரம்திரைப்படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ், அந்த படத்தின் கிளைமாக்ஸில் சூர்யாவுக்கு ஒரு பத்து நிமிட காட்சியை வைத்திருந்தார். ரோலக்ஸ் என்ற அந்த கேரக்டரில் சூர்யா நடிப்பில் அசத்தியிருப்பார் என்பதும் அந்த கேரக்டருக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து ரோலக்ஸ் என்று ஒரு தனி படமாகவே எடுக்க லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி என சக்கை போடு போட்டதை அடுத்து ரோலக்ஸ் கேரக்டர் ஹிந்தியிலும் பிரபலமானது.



இந்த நிலையில் அஜய் தேவ்கன், ஜோதிகா, மாதவன் நடித்தசைத்தான்திரைப்படம் இன்று வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் நேற்று இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் ஜோதிகாவுடன் சூர்யாவும் கலந்து கொண்டார். சூர்யாவை பார்த்ததும் ரசிகர்கள் அவரது பெயரை கூறாமல் அவர்விக்ரம்படத்தில் நடித்த ரோலக்ஸ் ரோலக்ஸ் என்று கூப்பிட்டது அருகில் இருந்த ஜோதிகாவுக்கே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வந்த ஒரு படத்தின் கேரக்டர், அதுவும் பத்தே நிமிடங்கள் மட்டும் வரும் கேரக்டர், வட இந்தியாவில் உள்ள ரசிகர்களை எந்த அளவுக்கு தாக்கம் செய்து உள்ளது என்பதை இந்த வீடியோவில் இருந்து தெரிய வருகிறது. இதை அடுத்து சூர்யாவை வைத்து மிக விரைவில்ரோலக்ஸ்படத்தை தொடங்க லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement

Advertisement