சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் ‘தலைவர் 171’ படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளியாகி வருகின்றன.
இந்த படத்தில் ரன்வீர் சிங், தீபிகா படுகோன், சாண்டி மாஸ்டர் உள்ளிட்ட சிலர் நடிக்க இருப்பதாக கூறப்படும் நிலையில் தற்போது இந்த படத்தில் வித்யா பாலன் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாக வந்திருக்கிறது. இருப்பினும் வித்யாபாலன் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கவில்லை என்றும் ஆனால் ரஜினிக்கு மிக நெருக்கமான ஒரு கேரக்டரில் தான் அவர் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த படத்தில் அதிக பாலிவுட் நட்சத்திரங்கள் இணைந்து வருவதை அடுத்து பாலிவுட்டில் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் இயக்கிய ’விக்ரம்’ மற்றும் ‘லியோ’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் பாலிவுட்டில் மிகப்பெரிய வசூல் செய்தது.
இந்நிலையில் அவரது அடுத்த படத்திற்கு பாலிவுட் நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. எனவே தான் அவர் பாலிவுட் பிரபலங்களை தன்னுடைய அடுத்த படத்தில் இணைத்து வருவதாகவும், இந்த படமும் ஒரு மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இந்த படம் படத்தின் பட்ஜெட் நாளுக்கு நாள் எதிரி வருவதாகவும் கூறப்படுகிறது.
’மாநகரம்’ ’கைதி’ ’மாஸ்டர்’ ’விக்ரம்’ ’லியோ’ ஆகிய ஐந்து தொடர் ஹிட் படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ் ஆறாவது படத்தையும் ஹிட் ஆக்குவார் என்று ரஜினி ரசிகர்கள் நம்பிக்கை உடன் உள்ளனர்.
Listen News!