கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள "ரெட்ரோ " திரைப்படம் மே மாதம் முதலாம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்து பூஜா ஹெக்டே ஜோடியாக நடித்துள்ளார். மேலும் ஜோஜூ ஜார்ஜ், ஜெயராம், நாசர், பிரகாஷ் ராஜ், கருணாகரன், நந்திதா தாஸ் என பலர் நடித்துள்ளனர். சூர்யாவின் 2d நிறுவனம் தயாரித்துள்ளதுடன் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
படத்தின் 3 பாடல்கள் இதுவரை வெளியாகியுள்ளதுடன் வெளியாகிய மூன்று பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. படம் வெளியாவதற்கு இன்னும் 6 நாட்கள் இருக்கும் நிலையில் படத்திற்கான ப்ரீ புக்கிங் ஆரம்பமாகி உள்ளது.
இந்நிலையில் கங்குவா படத்தின் தோல்வியின் பின்னர் சூர்யா ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஒரு திரைப்படம் ஆகவே இந்த ஆரம்பமாகி ஒரு சில தினங்களில் படம் ரூ. 15 லட்சம் வரை வசூல் செய்துள்ளது என சினிமா வட்டாரங்களில் இருந்து தகவல் கிடைத்துள்ளது.
Listen News!