• Jun 26 2026

சூர்யாவின் கம்பேக்கிற்கு இந்த நிலையா.? 'கருப்பு' முதல் நாளே துவண்டு போச்சே..

shali / 1 month ago

Advertisement

Listen News!

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள 'கருப்பு' திரைப்படம் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. முதலில் மே 14ஆம் தேதி வெளியாக இருந்த இந்த படம் சில காரணங்களால் ஒரு நாள் தாமதமாகி மே 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. 

ஆனால் அந்த தாமதம் படத்தின் மீதான எதிர்பார்ப்பை குறைக்கவில்லை; மாறாக ரசிகர்களின் ஆர்வத்தை இன்னும் அதிகரித்தது. நீண்ட காலமாக ஒரு பெரிய ஹிட்டுக்காக காத்திருந்த சூர்யாவுக்கு இந்த படம் தரமான கம்பேக் படமாக அமைந்துள்ளதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.


படம் வெளியான முதல் காட்சியிலிருந்தே ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. ஆர்.ஜே. பாலாஜியின் கதை சொல்லும் விதம், விறுவிறுப்பான திரைக்கதை மற்றும் ஸ்டைலிஷ் மேக்கிங் ரசிகர்களை முழுமையாக கவர்ந்துள்ளது. 

அதோடு, சூர்யா தனது அனுபவமிக்க நடிப்பால் திரையரங்கையே அதிரவைத்துள்ளார். குறிப்பாக ஆக்ஷன் மற்றும் எமோஷனல் காட்சிகளில் அவர் காட்டிய நடிப்பு ரசிகர்களிடையே பெரும் பாராட்டைப் பெற்றிருக்கிறது. திரிஷாவும் தனது கதாபாத்திரத்தில் அழகாக பொருந்தியுள்ளார்.

இந்நிலையில், Sacnilk வெளியிட்ட தகவலின்படி, 'கருப்பு' திரைப்படம் முதல் நாளில் இந்தியாவில் மட்டும் 16.66 கோடி ரூபாய் வசூலித்திருக்கிறது. 

வெளிநாடுகளில் சுமார் 4 கோடி ரூபாய் வசூலாகியுள்ளதால், மொத்தமாக முதல் நாளிலேயே 20.66 கோடி ரூபாயை படம் அள்ளியிருக்கிறது. தற்போது வார இறுதி விடுமுறை நாட்கள் என்பதால் அடுத்த இரண்டு நாட்களிலும் வசூல் இன்னும் அதிகரிக்கும் என பாக்ஸ் ஆஃபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement