• Jun 26 2026

சிரிக்க வைத்த நடிகரின் வீட்டில் கண்ணீர்... முதல்வரிடம் கோரிக்கை.!

shali / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக காமெடி நடிகராக ரசிகர்களை சிரிக்க வைத்தவர் முத்துக்காளை. வடிவேலு, விவேக் போன்ற முன்னணி காமெடி நட்சத்திரங்களுடன் நடித்த அவர், சமீப காலங்களில் மூன்று டிகிரிகள் பெற்று “படிப்புக்கு வயது ஒரு தடையில்லை” என்பதை நிரூபித்திருந்தார். ஆனால் தற்போது அவரது குடும்பத்தில் ஏற்பட்டிருக்கும் சோகம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


முத்துக்காளையின் மனைவி மாலதிக்கு திடீரென மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தாலும், அதன் பின்னர் ஏற்பட்ட கிருமி தொற்று காரணமாக கடந்த 17 நாட்களாக சுயநினைவு இல்லாமல் தீவிர சிகிச்சையில் இருந்து வருகிறார். தற்போது அவருக்கு மேல் சிகிச்சை அவசியம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், “தனியாக போராடிக் கொண்டிருக்கிறேன்” என்று உருக்கமாக தெரிவித்த முத்துக்காளை, தமிழக முதலமைச்சர் விஜய் உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

விஜய்யுடன் யூத், தமிழன், பகவதி, சுறா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள முத்துக்காளையின் இந்த வேண்டுகோள் தற்போது ரசிகர்களிடையே பெரும் கவனத்தை பெற்றுள்ளது. திரைத்துறையிலிருந்து அரசியலுக்கு வந்துள்ள விஜய், தனது சக நடிகரின் குடும்பத்திற்கு உதவுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


Advertisement

Advertisement