• Dec 05 2024

லப்பர் பந்து நடிகையை தொடர்ந்து சூர்யா 45ல் இணையும் முக்கிய நடிகர்...!

subiththira / 2 days ago

Advertisement

Listen News!

சினிமா துறையில் முன்னணி நடிகர் சூர்யா கடைசியாக கங்குவா படத்தில் நடித்திருந்தார். அடுத்து ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் அவரது 45வது படத்தில் நடித்து வருகிறார் டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ. ஆர் ரஹ்மான் இசையமைக்கின்றார்.


இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை திரிஷா நடிப்பதற்கு கமிட்டாகி இருக்கிறார்.இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு கோவையில் உள்ள தனியார் கல்லூரி மைதானத்தில் அரங்கம் அமைத்து படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர் ஏற்கனவே இந்த படத்தில் நடிக்க லப்பர் பந்து சுவாசிகா இணைந்துள்ளார் என்ற தகவல் வெளியானது. 


அதனை தொடர்ந்து மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க  நடிகர்  நட்ராஜ் இணைந்துள்ளார். சமீபத்தில் இவர் மகாராஜா, கடைசி உலகப்போர், சொர்கவாசல், பிரதர் மற்றும் கங்குவா ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.


தற்போது சூர்யா 45 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இவரின் நடிப்புக்கு பல ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் சூர்யா 45ல் இவரின் பங்களிப்பு எவ்வாறு இருக்கிறது என்று பார்ப்போம். 


Advertisement

Advertisement