• Jan 18 2025

திடீரென சரிவை சந்தித்த சன் டிவி சீரியல்கள்.. TRP ரேங்கில் டாப் 5 லிஸ்டில் விஜய் டிவி!

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

இந்திய தொலைக்காட்சிகளில் தமிழ் சீரியல்களுக்கு என்றே தனி இடம் காணப்படுகிறது. அதில், விஜய் டிவி, சன் டிவி ஆகிய இரண்டும் போட்டி போட்டு புது புது சீரியல்களை களமிறக்கி வருகின்றன.

அந்த வகையில், சன் டிவியில் சிங்கப்பெண்ணே, கயல், சுந்தரி, வானத்தைப் போல ஆகிய சீரியல்கள், விஜய் டிவியில் சிறகடிக்க ஆசை, பாக்கியலட்சுமி ஆகியவை மிகவும் பிரபலமாக காணப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த வாரம் டாப் 5 ரேங்கிங்கில் இடம்பிடித்த தொடர்களின் புள்ளி விபரத்தை பார்ப்போம். 


அதன்படி, சன் டிவியில் டாப்பில் இருக்கும் சிங்கப்பெண்ணே சீரியல் 9.46 மட்டுமே பெற்றுள்ளது. அதேபோல விஜய் டிவியில் சிறக்கடிக்க ஆசை சீரியல் மீண்டும் டாப் 5 லிஸ்டில் இடம் பிடித்து இருக்கிறது.


இரண்டாவது இடத்தில் கயல் சீரியல் 8.92 புள்ளிகளை பெற்றுள்ளது. அதை தொடர்ந்து எதிர்நீச்சல் சீரியல் 8.67 புள்ளியை பெற்றுள்ளது.

சிறகடிக்க ஆசை சீரியல் 8.19 புள்ளியை பெற்று நான்காவது இடத்திலும், வானத்தைப் போல சீரியல் 7.73 இடத்தை பெற்று ஐந்தாவது இடத்திலும் காணப்படுகிறது.

இதேவேளை, வழமையாக சன் டிவி சீரியல்கள் தான் முதல் ஐந்து இடத்தையும் பிடித்து வரும் நிலையில், தற்போது விஜய் டிவி சீரியல் முதல் ஐந்து இடங்களுக்கு உள்ளே வந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement