• Jan 18 2025

அருவியில் இருந்து ஜாலியாக சறுக்கிய கமல் அண்ணன் மகள்..53 வயதில் இது தேவையா?

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!

உலகநாயகன் கமல்ஹாசனின் அண்ணன் மகள் அனுஹாசன் அருவியில் இருந்து சறுக்கி தண்ணீரில் விழும் வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

உலகநாயகன் கமலஹாசனின் சகோதரர் சந்திரஹாசனின் மகள் அனுஹாசன், சுகாசினி இயக்கத்தில் உருவான ’இந்திரா’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு ’ஆளவந்தான்’ ’நளதமயந்தி’ ’ஆஞ்சநேயா’ ‘சந்தோஷ் சுப்பிரமணியம்’ உள்ளிட்ட பல திரைப்படங்களை நடித்தார் என்பதும் கடந்த ஆண்டு கூட அவர் இரண்டு தெலுங்கு படங்களில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

திரைப்படங்கள் மட்டுமின்றி தொலைக்காட்சி தொடர்களிலும் அனுஹாசன் நடித்துள்ளார் என்பதும் அவர் சில படங்களுக்கு டப்பிங் ஆர்டிஸ்ட் ஆக வேலை பார்த்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ’ஆளவந்தான்’ திரைப்படத்தில் நாயகி ரவீனா டண்டனுக்கு டப்பிங் கொடுத்தது அனுஹாசன் தான்.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் அனுஹாசன் சற்றுமுன் உயரமான அருவியில்  இருந்து சறுக்கி தண்ணீருக்குள் விழும் வீடியோவை பதிவு செய்துள்ளார். அனுஹாசனுக்கு தற்போது 53 வயதாகும் நிலையில் இந்த வயதில் இதெல்லாம் தேவையா என்ற கமெண்ட்ஸ் பதிவாகி வருகிறது. ஆனால் அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் அனுஹாசன் ஜாலியாக அந்த அருவியில் இருந்து சறுக்கியதை அனுபவித்து உள்ளார் என்பது தெரிய வருகிறது.


Advertisement

Advertisement