• Jan 18 2025

இத சஜெஸ்ட் பண்ணினது தான் அவங்க லைப்ல செய்த நல்ல காரியம்! MaPoo வை கொண்டாடும் ஃபேன்ஸ்

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பற்றுவதற்கு முன்பே பூர்ணிமா ரவி, சினிமாத் துறை மீது கொண்ட ஆர்வத்தினால் சிறிய வீடியோக்கள், போட்டோ சூட் என ஆரம்பித்து நாளடைவில் மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப தனது காமெடி வீடியோக்களை வெளியிட்டு மிகவும் பிரபலமானார்.

பிக் பாஸ் சீசன் 7 இல் பங்கு பற்றி, சிறப்பாக விளையாடியதோடு, இறுதியாக பிக் பாஸில் வைக்கப்பட்ட பணப்பெட்டியை 16 லட்சங்களுடன் எடுத்துக் கொண்டு பூர்ணிமா ரவி வெளியேறினார்.


இதை தொடர்ந்து அண்மையில் நயன்தாராவுடன் இணைத்து நடித்த அன்னப்பூரணி படமும் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.

பிக் பாஸ் நிகழ்ச்சி நிறைவடைந்த நிலையில், தற்போது மாயா, பூர்ணிமா இருவரும் இஷ்டத்துக்கு சுத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில், தற்போது மாயாவும், பூர்ணிமாவும் சென்ற இடமொன்றில் வைத்து, பூர்ணிமா சில விடயங்களை பகிர்ந்துள்ளார்.


அதில், நாங்க இப்போ 2.0 ல இருக்கம். இத என் பிரண்ட் ஒருத்தங்க தான் சஜெஸ்ட் பண்ணாங்க. அவங்க லைப்ல செய்த நல்ல காரியம் என்றா, இத சஜெஸ்ட் பண்ணினது தான். நான் வெரி ஹாப்பி என பகிர்ந்துள்ளார்.

குறித்த இடத்தில் வைத்து மாயா, பூர்ணிமா எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement