• Mar 04 2026

சாஃப்ட் வாய்ஸ்... ஹார்ட் கேர்ள்ஸ்..! கன்ட்ரோல் இன்றி ட்ரெண்டாகும் மாயா பாடல்? ஆனாலும் ஒரு ட்விஸ்ட்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டார்கள். அதில் ஒருவர் தான் நடிகை மாயா. இவர் ஒரு மேடை நாடக நடிகர். அத்துடன் மேடை நாடகங்களில் நடிப்பதில் அதிகம் ஆர்வம் கொண்டவர். 

மாயா ஒரு சில படங்களில் நடித்து இருந்தாலும் இவரை ரசிகர்கள் மத்தியில் பிரபல படுத்திய படம் என்றால் அது கண்டிப்பாக கமல் நடித்த விக்ரம் திரைப்படம் தான். லியோ படத்திலும் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.


பிக் பாஸ் டைட்டில் வின்னராக மாயா வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அர்ச்சனா தான் வெற்றி பெற்றார். ஆனாலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த மாயாவுக்கு , மேள தளத்துடன் சிறப்பாக வரவேற்ப்பு கொடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சி நிறைவடைந்த நிலையில், தற்போது மாயா தனது சகோதரியுடன் பாடலொன்றை பாடி இணையத்தில் வெளியிட்டு உள்ளார். அது செம வைரலாகி உள்ளது.


அதன்படி, என்னை தாலாட்ட வருவாளா? என்ற தளபதி நடிப்பில் வெளியான பாடலை மாயாவும் அவரது சகோதரியும் பாடகியுமான ஸ்வேதாவும் இணைத்து பாடி அசத்தியுள்ளார்கள்.

ஏற்கனவே பிக் பாஸ் வீட்டில் மாயா பாடும் பாடலுக்கு எல்லாரும் ஃபேன்ஸா காணப்படுவதோடு, வெளியில் வந்தும் மாயா பாடுவது ஃபேன்ஸ்க்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.


Advertisement

Advertisement