தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் சிவகார்த்திகேயன், தொடர்ந்து வெற்றிப் படங்களை வழங்கி வருகிறார். இதனால் தற்போது அவருடைய படங்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
இந்த நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் இன்று (பிப்ரவரி 17) தனது 41வது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு பராசக்தி பட இயக்குநர் சுதா கொங்கரா உட்பட திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் என பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
மேலும், தனது பிறந்த நாளை ஆன்மிக முறையில் கொண்டாடும் வகையில், சிவகார்த்திகேயன் மனைவி ஆர்த்தியுடன் திருவண்ணாமலை சென்று அண்ணாமலையாரை தரிசனம் செய்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

இதனிடையே, சிவகார்த்திகேயனின் 26வது திரைப்படமான ‘சேயோன்’ படத்தின் அறிவிப்பும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் நேற்று வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Listen News!