• Apr 15 2026

தளபதி 68 தொடர்பில் அடுத்தடுத்த அப்டேட்ஸ்.. இது தான் ஸ்பெஷல் நாளா? விஜய் ரசிகர்களுக்கு செம டுவிஸ்ட்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடைசியாக வெளியாகி இருந்த திரைப்படம் லியோ. த்ரிஷா பல வருடங்களுக்கு பிறகு விஜய்யுடன் கூட்டணி அமைத்ததால் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்தது. 

கிட்டதட்ட ரூ. 300 கோடி பட்ஜெட்டில் உருவாகி படம் ரூ. 600 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்தது. இப்படத்தை தொடர்ந்து விஜய், வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது 68வது படத்தில் நடித்து வருகிறார். AGS நிறுவனம் தயாரிக்க படத்தின் படப்பிடிப்பு துருக்கியில் நடந்து வருகிறது. 


இந்நிலையில், இந்தப் படத்தின் டைட்டில், ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு குறித்து சர்ப்ரைஸ் அப்டேட் வெளியாகியுள்ளது.

அதன்படி, தளபதி 68 ஃபர்ஸ்ட் லுக் புத்தாண்டு ஸ்பெஷலாக டிசம்பர் 31ம் திகதி  மாலை வெளியாகும் என தகவல்கள் தெரிவித்தன. 

அதன்பின்னர் நள்ளிரவு 12 மணிக்கு நியூ இயர் ஸ்பெஷலாக இரண்டாவது போஸ்டரை வெளியிடவுள்ளார்களாம். இறுதியாக ஜனவரி 1ம் திகதி மாலை தளபதி 68 டைட்டில் போஸ்டர் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.  


 


Advertisement

Advertisement